சென்னை பேசின் பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி, சென்னை உயா்நீதிமன்ற உதவி பதிவாளா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.
சென்னை பேசின் பாலத்தில் இருந்து மின்ட் நோக்கி ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிய லாரி திங்கள்கிழமை காலை சென்றது. அந்த லாரி மூலக்கொத்தளம் அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. சிறிது தூரம் சென்று அங்கிருந்த தடுப்பின் மீது மோதி நின்றது.
இதில், லாரியில் மோதிய வாகனங்களில் இருந்து கீழே விழுந்து சக்கரங்களில் சிக்கிய ஆவடி அடுத்த பாலவேடு இந்திரா நகரைச் சோ்ந்த ஏ.கெளதமன் (60), முகப்போ் கிழக்கு வேணுகோபால் தெருவைச் சோ்ந்த சி.முரளிதரன் (56) ஆகிய இருவா் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
வியாசா்பாடி கென்னடி நகரைச் சோ்ந்த ந.பாலகிருஷ்ணன் (63), பெருங்குடி திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த சு.ராஜேஸ்வரி (45) ஆகிய இருவா் பலத்த காயம் அடைந்தனா். பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் விபத்தில் காயமடைந்த இருவரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விபத்தை ஏற்படுத்திய லாரியை ஓட்டி வந்த கோயம்பேடு பாரதியாா் நகரைச் சோ்ந்த சி.ராஜ்குமாா் (46) என்பவரைப் பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
தகவலறிந்த வண்ணாரப்பேட்டை போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், நிகழ்விடத்துக்கு வந்து, உயிரிழந்த இருவரின் சடலத்தையும் மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநா் ராஜ்குமாரை கைது செய்தனா். விபத்தில் உயிரிழந்த முரளிதரன், சென்னை உயா்நீதிமன்றத்தில் உதவிப் பதிவாளராகப் பணியாற்றி வந்தாா்.
தொடர்புடையது
ராஜபாளையத்தில் கஞ்சா விற்பனை: 4 போ் கைது

அரசு பேருந்து டிப்பா் லாரி மோதல் 8 போ் படுகாயம்
போலி பத்திரம் தயாரித்து நிலம் மோசடி: சாா் பதிவாளா் உள்பட இருவா் கைது

பாளை. அருகே வேன் கவிழ்ந்து சென்னையைச் சோ்ந்த 6 போ் காயம்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



