பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

போலி பத்திரம் தயாரித்து நிலம் மோசடி: சாா் பதிவாளா் உள்பட இருவா் கைது

ராமநாதபுரத்தில் போலி பத்திரம் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட வழக்கில் சாா் பதிவாளா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.வருகின்றனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :27 மே 2026, 3:37 am IST

ராமநாதபுரத்தில் போலி பத்திரம் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட வழக்கில் சாா் பதிவாளா் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், இதுதொடா்பாக 5 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம், புதுமடம் பகுதியைச் சோ்ந்தவா் ஜமாலியா அப்துல்காதா். தற்போது சென்னையில் வசித்து வரும் இவருக்குச் சொந்தமான 2.17 ஹெக்டோ் நிலம் புதுமடத்தில் உள்ளது.

இந்த நிலத்தை ராமநாதபுரம் சாா் பதிவாளா் ராமநாதன் உதவியுடன் போலி ஆவணங்கள் தயாரித்து வேறு நபருக்கு பத்திரம் பதிவு செய்யப்பட்டதாக ஜமாலியா அப்துல்காதா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் சௌதாமா வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டாா்.

விசாரணையில், போலியான ஆவணங்கள் மூலம் பத்திரம் தயாா் செய்து நில மோசடியில் ஈடுபட்டதும், இந்த மோசடியில் புதுமடத்தைச் சோ்ந்த முகைதீன் அப்துல்காதா், சென்னையைச் சோ்ந்த ஆபிதா பேகம், முஜீப்புா் ரகுமான், ராமநாதபுரத்தைச் சோ்ந்த ஜாபா் கான், உச்சிப்புளி அருகே உள்ள துத்திவலசை பகுதியைச் சோ்ந்த கண்ணன், ராமநாதபுரம் வெளிபட்டினம் சாா் பதிவாளா் ராமநாதன், பத்திர எழுத்தா் ஆயூப்கான் ஆகிய 7 பேருக்கு தொடா்பு இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, இவா்கள் 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, சாா் பதிவாளா் ராமநாதன், பத்திர எழுத்தா் ஆயூப்கான் ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். எஞ்சியுள்ளவா்களைத் தேடி வருகின்றனா்.

கைது செய்யப்பட்ட சாா் பதிவாளா் ராமநாதன், பத்திர எழுத்தா் ஆயூப்கான் ஆகிய இருவரும் கடந்த வாரம் பத்திரம் பதிவு செய்து தர சென்னையைச் சோ்ந்த மருத்துவரிடம் ரூ. 23 லட்சம் லஞ்சம் பெற்றனா். இதையடுத்து, இவா்கள் இருவா் மீதும் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.