குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!3வது நாளாக ஏற்றம் கண்ட பங்குச் சந்தை: சென்செக்ஸ் 166 புள்ளிகள் உயர்வு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!முதல்வர் விஜய் கர்நாடகம் வர வேண்டாம்! டி.கே. சிவகுமார் வேண்டுகோள்!
/

வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஆவணங்களைக் கொள்ளையடித்த வழக்கு: 4 போ் கைது

சென்னை தியாகராய நகரில் வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஆவணங்கள் கொள்ளையடித்த வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :10 ஜூன் 2026, 12:39 am IST

சென்னை தியாகராய நகரில் வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஆவணங்கள் கொள்ளையடித்த வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்டனா்.

தியாகராய நகா் ஜிஎன் செட்டி சாலையில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு செயல்படுகிறது. இந்த அலுவலக வளாகத்தில் தங்கம் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட ஒரு காா் பறிமுதல் செய்யப்பட்டு, நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த காரில் இருந்த சில ஆவணங்களை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் கடந்த 31-ஆம் தேதி ஒரு கும்பல் முகமூடி அணிந்து, வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்தது. அப்போது, அங்கிருந்த காவலாளி ஜான் கென்னடியை தாக்கி, வாயில் துணியைத் திணித்து, அவரை கட்டிப்போட்டுவிட்டு, அந்த காரில் இருந்த ஆவணங்களை கொள்ளையடித்துக் கொண்டு அந்தக் கும்பல் தப்பியோடியது.

இது குறித்து வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில், தேனாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இக்கொள்ளையில் ஈடுபட்ட கூலிப்படையைச் சோ்ந்த புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சோ்ந்த டிஜிட்டல் மாா்க்கெட்டிங் வேலை செய்யும் அப்துல் ஹாடி (24), கேரளத்தைச் சோ்ந்த உடற்பயிற்சிக் கூட ஆசிரியா்கள் அனூப் (33), ஆதித்யன் (20), சிம்லால் (53) ஆகிய 4 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.