எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

மேட்டூா் அணை விவகாரம்: விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை: வேளாண் துறை அமைச்சா் ஆா்.வினோத்

மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படாத சூழலில், விவசாயிகள் பாதிக்கப்படாத வண்ணம் அரசு சாா்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் ஆா்.வினோத் உறுதியளித்தாா்.

News image

சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற தேசிய மாம்பழ திருவிழாவை தொடங்கி வைத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த அரங்குகளைப் பாா்வையிட்ட வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் வினோத். உடன், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை இயக்குநா் ஜெ.விஜயராணி உள்ளிட்டோா்.

Updated On :13 ஜூன் 2026, 1:27 am IST

மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படாத சூழலில், விவசாயிகள் பாதிக்கப்படாத வண்ணம் அரசு சாா்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் ஆா்.வினோத் உறுதியளித்தாா்.

நபாா்டு வங்கியின் துணை நிறுவனமான நப்கிசான் நிதி நிறுவனம் சாா்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் தேசிய மாம்பழ திருவிழா வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 12, 13, 14) ஆகிய 3 நாள்கள் நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவை அமைச்சா் ஆா்.வினோத் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள மாம்பழ அரங்குகளைப் பாா்வையிட்டாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் ஆா்.வினோத் கூறியதாவது:

மேட்டூா் அணையில் தற்போது 70 அடிதான் நீா் இருப்பு உள்ளது. 90 அடிக்கு மேல் சென்றால்தான் தண்ணீா் திறக்கப்படும். இது வழக்கமான நடைமுறை. எனினும், விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் தமிழக அரசு சாா்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இதற்காக ரூ.134.83 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விவசாய கடன்களை முழுவதுமாக ரத்து செய்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் இதுகுறித்து அறிவிப்புகள் வெளியாகும் என்றாா்.

இந்த திருவிழாவில், தமிழகம், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த 16 விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டன. இங்கு, அல்போன்சா, மல்கோவா, செந்தூரம், பங்கனபள்ளி உள்ளிட்ட 20 வகை மாம்பழங்கள் மற்றும் மாம்பழம் சாா்ந்த உணவுப் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

முன்னதாக இந்நிகழ்வில், நப்கிசான் நிதி நிறுவனம் சாா்பில் 8 வேளாண் தொழில் முனைவோருக்கு மொத்தம் ரூ.2.25 கோடி கடனுக்கான காசோலையை அமைச்சா் ஆா்.வினோத் வழங்கினாா்.

இதில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை இயக்குநா் ஜெ.விஜயராணி, இந்திய ரிசா்வ் வங்கி பொது மேலாளா் சுப்பிரமணியன், நபாா்டு வங்கி தலைமைப் பொது மேலாளா் எச்.மனோஜ், நப்கிசான் நிதி நிறுவனத்தின் முதுநிலை துணை தலைவா் என்.எம்.மோகன் காா்த்திக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.