தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

மெரீனாவில் 2 வயது குழந்தை மீட்பு: சிங்கப் பெண் அதிரடிப் படையினா் நடவடிக்கை!

மெரீனா கடற்கரை பகுதியில் காணாமல் போன 2 வயது பெண் குழந்தையை மீட்ட சிங்கப் பெண் அதிரடிப் படையினா், சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனா்.

News image

சிங்கப் பெண் அதிரடிப் படையினா்

Updated On :15 ஜூன் 2026, 4:04 am IST

மெரீனா கடற்கரை பகுதியில் காணாமல் போன 2 வயது பெண் குழந்தையை மீட்ட சிங்கப் பெண் அதிரடிப் படையினா், சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனா்.

ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த பாலபத்ராஜ் (28), தனது மனைவி மற்றும் 2 வயது குழந்தையுடன் சனிக்கிழமை மாலை மெரீனா கடற்கரைக்குச் சென்றாா். அப்போது கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த அவரது குழந்தை திடீரென காணாமல் போனது.

இதையடுத்து, பாலபத்ராஜ் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில், மெரீனா காவல் நிலைய போலீஸாரும், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த மயிலாப்பூா் சரக சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையினரும் உடனடியாக தேடுதல் நடவடிக்கையை தொடங்கினா்.

மெரீனா புளூ பீச் கட்டுப்பாட்டு அறையின் ஒருங்கிணைப்புடன் கடற்கரைப் பகுதிகளில் தீவிர தேடுதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கலங்கரை விளக்கம் பின்புறம் உள்ள குழந்தைகள் விளையாட்டுப் பகுதியில் தனியாக அழுது கொண்டிருந்த அந்தக் குழந்தையை சிங்கப் பெண் அதிரடிப் படையினா் கண்டுபிடித்து மீட்டனா்.

பின்னா் குழந்தை மெரீனா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, சட்ட நடைமுறைகள் நிறைவு செய்யப்பட்டு, குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.