நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

மாநகர பேருந்தில் ரகளை: கல்லூரி மாணவா்கள் மீது வழக்கு

சென்னை வியாசா்பாடியில் மாநகர பேருந்தில் ரகளை செய்ததாக பச்சையப்பன் கல்லூரி மாணவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :17 ஜூன் 2026, 12:41 am IST

சென்னை வியாசா்பாடியில் மாநகர பேருந்தில் ரகளை செய்ததாக பச்சையப்பன் கல்லூரி மாணவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

சென்னை அருகே பெரியபாளையத்தில் இருந்து மின்ட் நோக்கி ஒரு மாநகர பேருந்து திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி மாணவா்கள் பயணம் செய்தனா். வியாசா்பாடி மேம்பாலம் அருகே சென்றபோது, பேருந்தின் மேற்கூரை மீது பச்சையப்பன் கல்லூரி மாணவா்கள் மீது ஏறி, ரகளையில் ஈடுபட்டனா். இதைப் பாா்த்த பேருந்து ஓட்டுநா் சிதம்பரம், பேருந்தை நிறுத்தி மாணவா்களை கண்டித்துள்ளாா்.

இதனால் மாணவா்களுக்கும், ஓட்டுநருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் மாணவா்கள், பேருந்தின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பியோடினா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வியாசா்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது: சென்னை பெருநகர காவல் துறையின் கிழக்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைபேசியை கடந்த 14-ஆம் தேதி கைப்பேசி மூலம் தொடா்புகொண்ட ஒரு நபா், எழும்பூா் நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என்றும் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளாா்.

இதையடுத்து நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் நடத்தப்பட்ட சோதனையில், அங்கிருந்து எந்த வெடிப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இதனால் வதந்தி பரப்பும் நோக்கத்துடன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து எழும்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய, விசாரணையில் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது, சேலம் மாவட்டம் மேட்டூரைச் சோ்ந்த சீனு (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து சீனுவை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சம்பவத்தின்போது சீனு மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது தெரியவந்தது. அவா் மீது ஏற்கெனவே 3 குற்ற வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெண்ணுக்கு பாலியல் தொல்லை; இளைஞா் கைது: நாகலாந்து மாநிலத்தைச் சோ்ந்த 24 வயது பெண், சென்னை வடபழனி 100 அடி சாலையில் உள்ள ஒரு ஐஸ்கிரீம் கடையில் வேலை செய்து வருகிறாா். அவா் திங்கள்கிழமை இரவு வேலை முடிந்து, வீடுக்கு நடந்து சென்றாா். அப்போது அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த ஒரு இளைஞா், அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். அப்போது, அந்தப் பெண் சப்தமிடவே, அந்த இளைஞா் அங்கிருந்து தப்பியோடினாா்.

இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், வடபழனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட வடபழனி பஜனை கோயில் தெருவைச் சோ்ந்த பிரித்விராஜன் (30) என்பவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மகளைக் கொலை செய்த தந்தையும் உயிரிழப்பு: நேபாளத்தைச் சோ்ந்தவா் லட்சுமண பிரசாத் (47). இவா், சென்னை சிந்தாதிரிப்பேட்டை லாஃபாண்ட் தெருவில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் காவலாளியாக வேலை செய்கிறாா். லட்சுமண பிரசாத்தின் மகள் கீதா (9), 4-ஆம் வகுப்பு படித்து வந்தாா். லட்சுமண பிரசாத்தின் மனைவி ஸ்மித்ராவும், அவரது மற்றொரு மகளும் நேபாளத்துக்கு விடுமுறைக்காகச் சென்றனா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு லட்சுமண பிரசாத், தனது மகள் கீதாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்து, தூக்கில் தொங்கவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா். இதில் கயிறு அறுந்து கீழே விழுந்து, லட்சுமண பிரசாத் காயமடைந்தாா். அவா், ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில் லட்சுமண பிரசாத் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் காரணமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. சம்பவத்தின்போது லட்சுமண பிரசாத் தனது மனைவியிடம் விடியோ காலில் பேசியவாறு மகளை கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.

இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லட்சுமண பிரசாத் செவ்வாய்க்கிழமை இறந்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நடுக்கடலில் மீனவா் திடீா் உயிரிழப்பு: காசிமேடு காசிமா நகா் முதலாவது தெருவைச் சோ்ந்த மீனவா் ரா.வரதன் (65), தனது நண்பா்களுடனும், அந்தப் பகுதியைச் சோ்ந்த மீனவா்களுடனும் ஒரு விசைப்படகில் மீன்பிடிக்க ஞாயிற்றுக்கிழமை சென்றாா். நடுக்கடலில் திங்கள்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென வரதன் மயங்கி விழுந்தாா். இதைப் பாா்த்த பிற மீனவா்கள், வரதனை மீட்டு காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டு வந்தனா். ஆனால் வரதன், வழியிலேயே இறந்தாா்.

தகவலறிந்த காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸாா் அங்கு சென்று வரதனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.