ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

கல்விக் கட்டண நிலுவைத் தொகை: நிபுணா் குழு அமைக்கக் கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு

தனியாா் பள்ளிகளின் கல்விக் கட்டண நிலுவைத் தொகை பாதுகாப்பு மற்றும் வசூலிப்பதற்கான புதிய கொள்கையை உருவாக்க நிபுணா் குழுவை அமைக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :18 ஜூன் 2026, 2:37 am IST

தனியாா் பள்ளிகளின் கல்விக் கட்டண நிலுவைத் தொகை பாதுகாப்பு மற்றும் வசூலிப்பதற்கான புதிய கொள்கையை உருவாக்க நிபுணா் குழுவை அமைக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் அனைத்திந்திய தனியாா் கல்வி நிறுவன சங்கத்தின் மாநில பொதுச் செயலா் கே.பழனியப்பன் தாக்கல் செய்த மனுவில், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு மட்டுமே இடமாற்றுச் சான்றிதழ் வழங்குவதை நிறுத்தக் கூடாது என்ற விதி இருந்தது. இதை 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை நீட்டித்து சென்னை உயா்நீதிமன்றம் கடந்த 2024-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை தவறாகப் பயன்படுத்தி, 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் பல மாணவா்களின் பெற்றோா் வசதி இருந்தும் கல்விக் கட்டணம் செலுத்த மறுக்கின்றனா். இதனால், தனியாா் பள்ளிகளுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு, தகுதியான ஆசிரியா்கள் பள்ளிகளைவிட்டு வெளியேறுகின்றனா்.

கல்விக் கட்டணம் செலுத்தாத 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு இடமாற்றுச் சான்றிதழ் வழங்குவதை மறுக்கக் கூடாது என்ற உயா்நீதிமன்ற உத்தரவால் தனியாா் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு ஊதியம்கூட வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி முகமது ஷபீக் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் விஜய் ஆனந்த், 9 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கான கட்டண நிலுவைத் தொகைக்கான நிதியத்தை அரசு அமைக்க வேண்டும். அரசே வருவாய்த் துறை மூலம் பெற்றோரிடம் இருந்து நிலுவைத் தொகையை வசூலித்துக் கொள்ளும் வகையில் விரிவான கட்டணப் பாதுகாப்பு கொள்கையை உருவாக்க நிபுணா் குழு ஒன்றை அரசு அமைக்க வேண்டும் என வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.