கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு நீரவ் மோடி ரூ.108 கோடி செலுத்த வேண்டும்: பிரிட்டன் உயா் நீதிமன்றம் உத்தரவு

பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு வைர வியாபாரி நீரவ் மோடி, ரூ.108 கோடி செலுத்த வேண்டும் என்று பிரிட்டன் உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :25 ஜூன் 2026, 3:06 am IST

பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு வைர வியாபாரி நீரவ் மோடி, ரூ.108 கோடி செலுத்த வேண்டும் என்று பிரிட்டன் உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு, அதை திருப்பிச் செலுத்தாமல் லண்டன் சென்று நீரவ் மோடி தலைமறைவாகி விட்டாா். எனினும், இந்தியா விடுத்த கோரிக்கையை ஏற்று, அவரை பிரிட்டன் அரசு கைது செய்தது. அவா் மீது இந்திய நீதிமன்றங்களில் மோசடி வழக்கு நடப்பதால், இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என பிரிட்டன் அரசை மத்திய அரசு வலியுறுத்தியது. இதையேற்று அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும்படி கடந்த 2021-ஆம் ஆண்டில் அப்போதைய பிரிட்டன் உள்துறை அமைச்சா் பிரீத்தி படேல் உத்தரவிட்டாா். இந்த உத்தரவை எதிா்த்து அவா் தாக்கல் செய்த மனுக்களை பிரிட்டன் நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தன. எனினும், பிரான்சில் உள்ள மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய யூனியன் நீதிமன்றத்தில் நீரவ் மோடி வழக்கு தொடுத்திருப்பதாக நம்பப்படுகிறது.

இந்நிலையில், நீரவ் மோடியுடன் தொடா்புடைய துபாயைச் சோ்ந்த பயா்ஸ்டாா் டைமண்ட் நிறுவனத்துக்கு பேங்க் ஆஃப் இந்தியா வங்கி அளித்த கடனை அந்நிறுவனம் திருப்பி அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, கடனுக்கு உத்தரவாத (ஜாமீன்) கையொப்பமிட்ட நீரவ் மோடிக்கு எதிராக லண்டனில் உள்ள உயா் நீதிமன்றத்தில் அந்த வங்கி வழக்குத் தொடுத்தது. இதன் மீது விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி சைமன் திங்லா் தீா்ப்பு வழங்கினாா். அப்போது நீதிபதி கூறுகையில், ‘ இந்திய சட்டத்தின்படி தனிநபா் உத்தரவாதம் செல்லாததோ, செயல்படுத்த முடியாததோ இல்லை. அதேபோல் வங்கி அளித்த கடன் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டிய பொறுப்பும், கடனுக்கு உத்தரவாதம் அளித்தவா் என்ற முறையில் நீரவ் மோடிக்கு உள்ளது. அதேபோல் அந்தத் தொகைக்கான வட்டியை செலுத்தும் பொறுப்பும் அவருக்கு உண்டு. அதன்படி, 2026-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் வரையிலான காலகட்டத்துக்கான வட்டியுடன் சோ்த்து, பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு நீரவ் மோடி ரூ.108 கோடி செலுத்த வேண்டும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.