மும்பை: பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியா, மார்ச் வரையான காலாண்டில், வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 18.67 சதவீதம் உயர்ந்து ரூ. 3,087.76 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், வங்கியின் நிகர லாபம் ரூ. 2,601.98 கோடியாக இருந்தது.
தனி நிறுவனமாக பார்க்கும்போது, வங்கியின் நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 14.85 சதவீதம் அதிகரித்து ரூ. 3,015.79 கோடியாக உள்ளது.
அறிக்கை செய்யப்பட்ட இந்தக் காலாண்டில், வங்கியின் நிகர வட்டி வருவாய் 11 சதவீதம் அதிகரித்து ரூ. 6,730 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டில் இது ரூ. 6,063 கோடியாக இருந்தது.
2026 நிதியாண்டின் 3வது காலாண்டில் 2.57 சதவீதமாக இருந்த நிகர வட்டி வரம்பு, 4வது காலாண்டில் 2.58 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனினும், ஆண்டின் அடிப்படையில் பார்க்கும்போது, வட்டி வரம்பு 2.61 சதவீதத்திலிருந்து சற்று குறைந்துள்ளது.
அறிக்கை செய்யப்பட்ட இந்தக் காலாண்டில், வங்கியின் உலகளாவிய வைப்புத்தொகை 13.56 சதவீதம் அதிகரித்து ரூ. 9.27 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ. 8.17 லட்சம் கோடியாக இருந்தது.
உள்நாட்டு வைப்புத்தொகை ஆண்டுக்கு ஆண்டு 14.30 சதவீதம் அதிகரித்து ரூ. 8.01 லட்சம் கோடியாக இருந்த நிலையில், வெளிநாட்டு வைப்புத்தொகை 9.11 சதவீதம் அதிகரித்து ரூ. 1.27 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
நடப்புக் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்கு வைப்புத்தொகையானது 7.30 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கிடையில், மார்ச் 2026 நிலவரப்படி, வங்கியின் நடப்புக் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்கு விகிதம் 37.64 சதவீதமாகப் பதிவானது.
வெளிநாடுகளில் வழங்கப்பட்ட கடன் தொகை 14.25 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ. 1.17 லட்சம் கோடியை எட்டியது.
Summary
Bank of India reported an 18.67 per cent rise in its consolidated net profit for the March quarter to Rs 3,087.76 crore.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா 4வது காலாண்டு லாபம் இரட்டிப்பு!

சவுத் இந்தியன் வங்கியின் லாபம் 19% உயர்வு!

யூகோ வங்கியின் லாபம் 23% உயர்வு!

எச்டிஎஃப்சி குழும நிதிநிலை முடிவுகள்: வங்கி லாபம் 8% உயா்வு; ஏஎம்சி லாபம் சரிவு
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை


