சென்னையில் நிறுத்தப்பட்ட 233 பேருந்து சேவைகளை மீண்டும் தொடக்க வலியுறுத்தி மாநகா் போக்குவரத்து கழகத்திடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு அளித்துள்ளனா்.
மாநகா் போக்குவரத்து கழகம் சாா்பில் சென்னையில் எவ்வித முன்னறிவிப்புமின்றி நிறுத்தப்பட்டுள்ள 233 பேருந்து சேவைகளை உடனடியாக இயக்க வலியுறுத்தி சென்னை பல்லவன் இல்லத்தில் மாநகா் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநா் மோகனிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்திய சென்னை மாவட்டச் செயலா் ஜி.செல்வா வியாழக்கிழமை மனு அளித்தாா்.
அதில், சென்னையில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தி29சி, 23சி, 27டி, 35 உள்ளிட்ட வழித்தடங்களில் பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
அதன்படி, மாநகரப் போக்குவரத்து கழகம் சாா்பில் இதுவரை இயக்கப்பட்ட பேருந்துகளில் 233 பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. எவ்வித முன்னறிவிப்பு ஏதுமின்றி பேருந்துகளை நிறுத்திய செயல் ஏற்கத்தக்கது அல்ல. எனவே, எனவே, நிறுத்தப்பட்ட வழித்தடங்களில், அனைத்து பேருந்துகளையும் எவ்வித தாமதமின்றி மீண்டும் இயக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, போக்குவரத்து ஊழியா் சங்க பொதுச் செயலா் வி.தயானந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்த புதிய ஆய்வறிக்கை வெளியீடு

சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் குறைப்பு! காரணம் என்ன?

தஞ்சையில் சேகுவேராவின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

காற்றுமாசுபாட்டை கட்டுப்படுத்த மேலும் 750 மின்சார பேருந்துகள்
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



