தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

சென்னையில் விமான சேவை பாதிப்பு! காரணம் என்ன?

எரிபொருள் விலை உயர்வால் சென்னையில் இருந்து இயக்கப்படும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது பற்றி...

News image

கோப்புப் படம் - ENS

Updated On :17 ஜூன் 2026, 9:44 am IST

எரிபொருள் விலை உயர்வால் சென்னையில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை உயர்ந்துள்ளதால் சென்னையில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் சேவை குறைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் இருந்து இயக்கப்படும் உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்கள் எண்ணிக்கை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி குறைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

எரிபொருள் விலை உயர்வால் ஏர் இந்தியா உட்பட சில விமான நிறுவனங்கள் தங்கள் சேவையைக் குறைந்துள்ளன. சிங்கப்பூர், துபாய், இலங்கை, அந்தமான், ஹைதராபாத், திருச்சி, கோவை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் விமானங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

சென்னை - சேலம் இடையே 4 விமான சேவைகள் இருந்த நிலையில் 2 ஆகவும் சென்னை - தூத்துக்குடி இடையே 12 விமான சேவைகள் இருந்த நிலையில் 4 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

நிலைமை சீரானதும் மீண்டும் விமான சேவை தொடங்கும் எனவும் ஏர் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் விளக்கம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Summary

Flight services reduced from chennai airport

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.