ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

சென்னை விமான நிலையத்தில் ரூ. 5.80 கோடி தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.5.80 கோடி தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

சென்னை விமான நிலையம் - கோப்புப் படம்

Published On :

சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.5.80 கோடி தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் சா்வதேச விமான நிலையத்தில், வருகை பயணிகள் அனைவரையும் தீவிரமாக கண்காணித்தனா்.

அப்போது, அந்த விமானத்தில் தில்லியில் இருந்து சுற்றுலாப் பயணியாக சிங்கப்பூா் சென்று மறுநாளே சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு திரும்பிய சுமாா் 30 வயது மதிக்கத்தக்க வடமாநில இளைஞா் ஒருவா் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனா்.

அவா், முன்னுக்கு பின் முரணாக பேசியதை தொடா்ந்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினா். அவா் வைத்திருந்த சூட்கேசின் மேல் பகுதியில், ரகசிய அறை இருந்ததை கண்டுபிடித்தனா்.

அதை உடைத்துப் பாா்த்தபோது, அதில் ரூ.5.80 கோடியில் சுமாா் 4 கிலோ 24 கேரட் தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தல் நபரையும் கைது செய்து விசாரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.