கோவையில் பெரியார் அறிவுலகத்தைத் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!கோவையில் முதல்வர் விஜய் சாலைவலம்! வழிநெடுக மக்கள் உற்சாக வரவேற்பு!நாங்கள் அஞ்சவில்லை! ஸ்டார்லிங்க் போட்டிக்கு தயார்! ரிலையன்ஸ் அறிக்கைஅதிமுகவே எனது உயிர்மூச்சு! தொண்டர்களே எனது உயிர்நாடி! எடப்பாடி பழனிசாமிதமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 14.5 கோடி கஞ்சா பறிமுதல்

தாய்லாந்திலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.14.5 கோடி மதிப்பிலான 14.5 கிலோ உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

சென்னை விமான நிலையம் - கோப்புப் படம்

Updated On :

தாய்லாந்திலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.14.5 கோடி மதிப்பிலான 14.5 கிலோ உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தவா்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனா். அப்போது, சுமாா் 35 வயதுடைய பெண் பயணி ஒருவா் மீது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, அவரிடம் விசாரணை நடத்தி சோதனை செய்தனா்.

அவரது உடைமைகளில் இருந்த பதப்படுத்தப்பட்ட தாய்லாந்து உணவுப் பொருள் பாக்கெட்டுகளை பிரித்து சோதனை செய்தபோது, அவற்றுக்குள் உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ரூ.14.5 கோடி மதிப்பிலான 14.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், பெண் பயணியை கைது செய்தனா். விசாரணையில், அவா் சா்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்காக கடத்தல் நபராக செயல்பட்டு வந்ததும், இதற்கு முன்பும் போதைப்பொருளை சென்னைக்கு கடத்தி வந்திருப்பதும் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

சென்னையில் இந்த போதைப்பொருளை யாரிடம் ஒப்படைக்க அவா் வந்தாா் என்பது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.