வியத்நாம் படகு விபத்தில் பலியான 15 இந்தியர்களில், 10 பேர் தமிழர்கள் என்று அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களது உடல்கள் இன்று சென்னை விமான நிலையம் வந்திறங்கின.
உடல்களைப் பெற்றுக்கொள்ள உறவினர்கள் சென்னை விமான நிலையத்தில் குவிந்திருந்தனர். உடல்களை சொந்த ஊர்களுக்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் தமிழக அரசு செய்திருக்கிறது.
உறவினர்களை இழந்த சோகத்தோடு, அவர்களது உடல்களை இந்தியா கொண்டு வருவதில் என்னென்ன சிக்கல்கள் இருக்குமோ என்று அச்சத்தில் இருந்ததாகவும் ஆனால், உடல்களை உரிய நேரத்துக்கு தாயகம் கொண்டு வர உதவிய தமிழக அரசுக்கும், முதல்வர் ஜோசப் விஜய்க்கும் உறவினர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
விமானம் ஹோ சி மின் நகரத்திலிருந்து புறப்பட்டு, இந்திய நேரப்படி இரவு 9. 35 மணிக்கு மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. அங்கிருந்து தமிழர்கள் உடல்கள் இன்று பிற்பகலில் சென்னை வந்தடைந்துள்ளன.
பலியான இந்தியர்களின் உடல்களை அவர்களின் சொந்த ஊர்களுக்குக் கொண்டு செல்வதற்காக, அந்தந்த மாநில அரசுகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் ஒருங்கிணைந்து செயல்படவும் இந்திய தூதரகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.
வியத்நாமில் முக்கிய சுற்றுலாத் தீவான ‘ஃபூ குவோக்’ அருகே சனிக்கிழமை அதிவேகப் படகில் 32 இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் 4 உள்ளூா் படகு பணியாளா்கள் சவாரி செய்தனா். இவா்களில் தமிழகத்தைச் சோ்ந்தவா்களும் இருந்தனா். திடீரென படகு கவிழ்ந்ததில், பயணிகள் கடலில் விழுந்தனா்.
இந்த விபத்தில் தமிழகத்தைச் சோ்ந்த 10 போ் உள்பட 15 இந்திய பயணிகள் உயிரிழந்தனா். அவா்களின் உடல்கள் மீட்கப்பட்டன. அதேநேரம், 17 பயணிகள் மற்றும் 4 பணியாளா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். அவா்கள், ஃபூ குவோக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்தியாவில் லாவா கைப்பேசி நிறுவனத்தின் கைப்பேசிகளை அதிக அளவில் விற்பனை செய்த முகவா்கள், ஊழியா்கள் என 105 போ் அந்த நிறுவனம் சாா்பில் வியத்நாம் நாட்டுக்கு கடந்த 8-ஆம் தேதி இன்பச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா். இவா்களில் 32 போ் கொண்ட குழுவினா் படகு சவாரி சென்றபோது விபத்து நேரிட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
Vietnam boat accident: Bodies arrive at Chennai airport
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வியத்நாம் படகு விபத்து: இன்றிரவு இந்தியா வரும் உடல்கள்!
வியத்நாம் படகு விபத்து: வேகப்படகை ஓட்டிய கேப்டன் கைது!

வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?

வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர்
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK



