வியத்நாம் படகு விபத்தில் இந்தியர்கள் 15 பேர் பலியானதைத் தொடர்ந்து, அந்தப் படகை ஓட்டிய கேப்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெற்கு வியத்நாமில் பிரபல சுற்றுலாத் தளமான, பு குவாக் தீவு (Phu Quoc Island) அருகே, சுற்றுலாவுக்குச் சென்ற 32 இந்தியர்கள் படகு சவாரிக்குச் சென்றுள்ளனர். அவர்களுடன் 4 படகு ஊழியர்களும் இருந்தனர்.
நேற்று (ஜூலை 11) பகல் 11.30 மணியளவில் கடலில் சென்று கொண்டிருக்கும்போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் 15 பேர் பலியாகினர். பலியானோரில் 10 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
இதனைத் தொடர்ந்து, கடல்சார் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி வேகப்படகை இயக்கியதாகவும், அதுவே படகு கவிழக் காரணமானதாகவும் கூறி 57 வயதான கேப்டனை வியத்நாமின் அன் ஜியாங் மாகாணக் காவல்துறையினர் கைது செய்தனர்.
விபத்து நடந்தபோது அப்பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், மழை பெய்யவில்லை என்பதால் பிற சுற்றுலாப் படகுகளும் இயங்கிக்கொண்டிருந்தன என்று விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் பொதுவாக ஃபு குவோக்கிலிருந்து அதிவேகப் படகுகள் மூலம் அருகிலுள்ள சிறிய தீவுகளுக்குச் செல்கின்றனர். இந்த விபத்தைத் தொடர்ந்து, பல நிறுவனங்கள் தீவுகளுக்கு இடையிலான அதிவேகப் படகு சேவைகளை நிறுத்தி வைத்துள்ளன.
ஃபு குவோக்கிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 18 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டுப் பயணிகள் அங்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
Summary
Vietnam boat accident: Speedboat captain arrested!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









