FOLLOW US

ON GOOGLE DISCOVER

பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்?

வியத்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image

வியத்நாம் படகு விபத்து - X

Updated On :11 ஜூலை 2026, 7:35 pm IST

வியத்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் உள்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

தெற்கு வியத்நாமில் பிரபல சுற்றுலா இடமான, பு குவாக் தீவு (Phu Quoc Island) அருகே, சுற்றுலாவுக்குச் சென்ற 32 இந்தியர்கள் படகு சவாரிக்குச் சென்றுள்ளனர். அவர்களுடன் 4 படகு ஊழியர்களும் இருந்தனர். இன்று பகல் 11.30 மணியளவில் கடலில் சென்று கொண்டிருக்கும்போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துக்குள்ளான படகில் சுமார் 20 தமிழர்கள் இருந்திருக்கின்றனர். இவர்களில் பலரும் லாவா மொபைல் நிறுவனத்தின் சார்பில் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் படகு விபத்தில் உயிரிழந்தவர்களில் 10 பேர் தமிழர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை வியத்நாமிற்கான இந்திய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும் இறந்தவர்களில் 3 பேர் ஆந்திரம், 2 பேர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலியான தமிழர்கள் முழு விபரம்:

பலியானவர்கள் பெயர் - தந்தை பெயர்

1. செந்தில் குமார் - ஜெயவேல்

2. முருக பிரபு - ஆறுமுகம்

3. ஸ்ரீதர் - சுந்தரராஜன்

4. ஷேக் அப்துல்லா - அப்துல்மஜீத்

5. பாலாஜி - நடேசன்

6. வினய குமார் - சித்தாபுரம் பாஸ்கரா

7. ரவிசங்கர் - சுகுமாறன்

8. சந்தோஷ் குமார் - சாந்திலால் ஜெயின்

9. பாபு - குப்புசாமி

10. அழகுராஜன் - சிவசாமி

உதவி எண்கள் அறிவிப்பு

வியத்நாம் படகு விபத்து தொடர்பாக ஹோ சி மின் (Ho Chi Minh) நகரத்தில் அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, +84 36 281 7930, +84 91 552 37 14, +84 33 452 0414 ஆகிய உதவி எண்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும், ஹனோய் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ள +84 91 308 9165 என்ற தொடர்பு எண் வழங்கப்பட்டுள்ளது.

Story image

Summary

Fifteen people, including 10 from Tamil Nadu, have been killed in a tourist boat accident in Vietnam.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.