FOLLOW US

ON GOOGLE DISCOVER

பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

வியத்நாம் படகு விபத்து வருத்தமளிக்கிறது: லாவா நிறுவனம் அறிக்கை!

வியத்நாம் படகு விபத்து தொடர்பாக லாவா நிறுவனம் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

News image

வியத்நாம் படகு விபத்து தொடர்பாக லாவா நிறுவனம் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Updated On :11 ஜூலை 2026, 7:32 pm IST

வியத்நாம் படகு விபத்து தொடர்பாக லாவா நிறுவனம் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

தெற்கு வியத்நாமில் பிரபல சுற்றுலா இடமான, பு குவாக் தீவு (Phu Quoc Island) அருகே, சுற்றுலாவுக்குச் சென்ற 32 இந்தியர்கள் படகு சவாரிக்குச் சென்றுள்ளனர். அவர்களுடன் 4 படகு ஊழியர்களும் இருந்தனர்.

இன்று பகல் 11.30 மணியளவில் கடலில் சென்று கொண்டிருக்கும்போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் 15 பேர் பலியாகினர். இந்தப் படகில் 20 தமிழர்கள் சென்றதாகக் கூறப்பட்டது. அதில், 10 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுற்றுலா சென்றவர்களில் பலரும் சிறந்த வணிக செயல்பாட்டுக்காக லாவா மொபைல் நிறுவனத்தின் சார்பில் அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், லாவா நிறுவனம் இரங்கல் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “வியத்நாமில் இன்று நடந்த துயரமான விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த விபத்தில் எங்கள் நிறுவனத்தின் ஊழியர்களும், குழுவினரும் பாதிப்படைந்துள்ளனர்.

எங்கள் குழுவினரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்த தகவல்களுக்காக, வியத்நாமில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம்.

பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்குவோம். இந்தியாவிலும் வியத்நாமிலும் உள்ள எங்கள் குழுக்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தொடர்பில் இருந்து தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றது.

ஹோ சி மின் நகரில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் சார்பில் அங்கு ஒரு கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக தகவல் அல்லது உதவி தேவைப்படும் குடும்பங்கள் +84 36 281 7930, +84 91 552 37 14, அல்லது +84 33 452 0414 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

விபத்து பற்றி அதிகாரிகள் தெரிவிக்கும் மேலதிகத் தகவல்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். எங்களுக்குக் கிடைக்கும் தகவல்களை உரிய நேரத்தில் தொடர்ந்து வழங்குவோம்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

Summary

Vietnam boat accident is distressing: Lava company statement!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.