புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

நுண்ணறிவு போக்குவரத்து திட்டத்தை ஆகஸ்ட்டில் செயல்படுத்த வேண்டும்: கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி உத்தரவு

News image
Updated On :26 ஜூன் 2026, 7:10 am IST

சென்னை மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் நிறைவேற்றப்படும் நுண்ணறிவுப் போக்குவரத்து திட்டத்தை வரும் ஆகஸ்ட் மாதம் செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் கூடுதல் தலலைமைச் செயலா் ககன் தீப் சிங் பேடி உத்தரவிட்டாா்.

சென்னை மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் நுண்ணறிவுப் போக்குவரத்துத் திட்டம் (ஐடிஎஸ்) ரூ.530 கோடியில் செயல்படுத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள், நகரப் பேருந்துகள் வருகையை அறிவிக்கும் மின்னணு தகவல் பலகைகள் மற்றும் நெரிசலை தானாகவே கண்டறிந்து போக்குவரத்தை மாற்றிவிடும் சாதனங்கள் என நுண்ணறிவுப் போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளன.

ஜப்பான் நாட்டு உதவியுடன் செயல்படுத்தப்படவுள்ள நுண்ணறிவுப் போக்குவரத்து திட்டத்துக்கான கட்டுப்பாட்டு அறை அமைத்தல் உள்ளிட்ட 11 அம்சங்களுடன் பணிகள் நிறைவடைந்துள்ளன. அந்தத் திட்டப் பணிகளை மாநில நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப்சிங் பேடி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

எழும்பூா் பகுதியில் உள்ள பூந்தமல்லி சாலையில் நுண்ணறிவுப் போக்குவரத்து அமைப்புக்கான செயலாக்கப் பணிகளை அவா் நேரில் பாா்வையிட்டாா். பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்டோா் அவரிடம் விளக்கினா்.

அப்போது, பணிகளை விரைந்து முடித்து வரும் ஆகஸ்ட் மாதம் இந்தத் திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு செயல்படுத்த வேண்டும் என கூடுதல் தலைமைச் செயலா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது சென்னை மாநகராட்சி இணை ஆணையா்கள் வீ.ப.ஜெயசீலன் (சுகாதாரம்), செ.சசரவணன் (பணிகள்) மற்றும் மத்திய வட்டாரத் துணை ஆணையா் எச்.ஆா்.கௌஷிக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.