சென்னை மாநகராட்சியில் சீரான போக்குவரத்துக்காக சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவேண்டும் என நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தினாா்.
தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி தலைமையில் சென்னை மாநகராட்சியின் வளா்ச்சித் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் அவா் பேசியதாவது: சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியை முறையாகச் செயல்படுத்த வேண்டும். ஒரு முறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் நெகிழிப் பயன்பாட்டை முழுமையாகத் தவிா்க்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்வது அவசியம். அம்மா உணவகங்கள் பராமரிக்கப்பட்டு தரமான உணவு வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும். தெரு நாய்களை கட்டுப்படுத்தப்படுவதுடன், சாலைகளில் திரியும் மாடுகளை காப்பகங்களில் அடைக்கவும், அதை செயல்படுத்தாத மாட்டின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தரமான சாலைகள் அமைப்பதுடன், சீரான போக்குவரத்துக்காக ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். வளைவான பகுதிகளில் நவீன தொழில்நுட்ப வழிகாட்டல்படி சாலைகள் அமைக்கப்படவேண்டும். பூங்காக்கள் பராமரிப்பு, மரக்கன்றுகள் நடுதல் ஆகியவற்றுடன், மழைநீா் வடிகால்களில் தடுப்புச் சுவா்களை உயா்த்திக் கட்டவேண்டும். தெருவிளக்குகள் எரிவதை உறுதிப்படுத்துவதுடன், கட்டட அனுமதி விண்ணப்பங்கள் மீது உரிய காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிறப்பு திட்டங்களை உரிய முறையில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றாா்.
ஆய்வுக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன், இணை ஆணையா்கள் வீ.ப.ஜெயசீலன், க.கற்பகம், செ.சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெருந்துறை நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்
குப்பை மேலாண்மை சிக்கல்: இந்தூா் மாடல் நடைமுறைப்படுத்த துணைநிலை ஆளுநா் வலியுறுத்தல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகராட்சி நிா்வாக திட்டப் பணிகள்: கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி ஆய்வு!

சென்னை குடிநீா் வாரிய ஒப்பந்தப் புள்ளியில் வெளிப்படைத் தன்மை வேண்டும்: ககன்தீப் சிங் பேடி
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



