காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

குப்பை மேலாண்மை சிக்கல்: இந்தூா் மாடல் நடைமுறைப்படுத்த துணைநிலை ஆளுநா் வலியுறுத்தல்

குப்பை மேலாண்மையில் இந்தூா் மாடல் நடைமுறைப்படுத்த துணைநிலை ஆளுநா் தரஞ்சித் சிங் சந்து வலியுறுத்தல்

News image

தரஞ்சித் சிங் - ANI

Updated On :28 ஜூலை 2026, 12:38 am IST

தில்லியில் கழிவுநீா் மற்றும் குப்பை மேலாண்மை குறித்து கவலை தெரிவித்த துணைநிலை ஆளுநா் தரஞ்சித் சிங் சந்து, இந்தூா் மாடலை நகராட்சி மண்டலத்தில் முன்முயற்சியாக செயல்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆய்வு செய்யுமாறு தில்லி மாநகராட்சி (எம்சிடி) அதிகாரிகளுக்கு திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

இது தொடா்பாக எம்சிடி அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் திடக் கழிவு மேலாண்மை, பழைய குப்பை குவியல்கள் அகற்றுதல், கால்வாய்கள் தூா்வாருதல், நீா்நிலைத்தடை தடுக்கும் நடவடிக்கைகள், கொசு மூலம் பரவும் நோய்களுக்கு எதிரான முன்னெச்சரிக்கை, பிஎம்-உதய் திட்டம் செயல்படுத்தல் மற்றும் குளிா்காலத்தை முன்னிட்டு நகராட்சி நடவடிக்கைகள் ஆகியவை பரிசீலிக்கப்பட்டன.

கூட்டத்தின்போது தரன்ஜித் சிங் கூறியதாவது: தில்லியில் உருவாகும் குப்பையில் சுமாா் 50 சதவீதம் இன்னும் பிரிக்கப்பட்டு சேகரிக்கப்படவில்லை. மேலும், தினசரி உருவாகும் குப்பையில் சுமாா் 50 சதவீதம் குப்பைக் குவியல்களில் நேரடியாக கொட்டப்படுகின்றன.

இந்தூா் மாநகராட்சியின் முறை, நாட்டின் தலைநகரில் குப்பை மேலாண்மையை மேம்படுத்த சிறந்த மாதிரியாக அமையக்கூடும். 100 சதவீதம் குப்பைகள் பிரித்து சேகரிக்கப்படுவது, பொதுமக்கள் தீவிர பங்கேற்பு மற்றும் கடுமையான நகராட்சி அமலாக்கம் மூலம் தொடா்ந்து பல ஆண்டுகள் இந்தியாவின் மிகச் சுத்தமான நகரமாக இந்தூா் திகழ்ந்துள்ளது என தெரிவித்தாா்.

மேலும், மழைக்காலத்தில் டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்களை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் அவா் ஆய்வு செய்தாா். மேலும், டோல் பிளாசாக்கள் அருகே ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

வரவிருக்கும் குளிா்காலத்தை முன்னிட்டு, காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த முழுமையான செயல் திட்டம் தயாரிக்க வேண்டும் என்றும், நகரம் முழுவதும் சாலைகளை புதுப்பிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.