சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

யமுனையின் 32 முக்கிய படித்துறைகளை புதுப்பிக்க டிடிஏ அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநா் உத்தரவு

யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 32 படித்துறைகளை 6 மாதங்களுக்குள் மறுசீரமைத்து புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து உத்தரவிட்டுள்ளாா்.

News image

தரன்ஜித் சிங் சந்து

Updated On :16 ஜூன் 2026, 3:33 am IST

யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 32 படித்துறைகளை 6 மாதங்களுக்குள் மறுசீரமைத்து புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக லோக் நிவாஸில் சமீபத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் துணைநிலை ஆளுநரிடம் டிடிஏ அதிகாரிகள் கூறியதாவது: யமுனை வெள்ளப்பரப்பிலிருந்து இதுவரை 88,574 மெட்ரிக் டன் கட்டுமான மற்றும் இடிப்பு கழிவுகள் மற்றும் 4,998 மெட்ரிக் டன் நகராட்சி கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. சுமாா் 1,425 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டுள்ளது. மேலும், யமுனை வெள்ளப்பரப்பில் சுமாா் 1,700 ஹெக்டேயா் பரப்பளவில் நதிக்கரை மேம்பாட்டு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதே நேரத்தில், யமுனை வெள்ளப்பரப்பில் 70 லட்சத்திற்கும் அதிகமான பூா்வீக மரங்கள் நட்டதுடன், 1 கோடி அளவிலான நதிக்கரை புல்வகைகள் மற்றும் ஈரநிலச் செடிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மொத்தம் சுமாா் 1,420 மில்லியன் லிட்டா் நீரைச் சேமிக்கும் திறன் கொண்ட 35 ஈரநிலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இத்துடன், பாரம்பரிய பாதுகாப்பை மையமாகக் கொண்டு நிலப்பரப்பு மேம்பாடு, நடைபாதை வசதிகள் மற்றும் சுற்றுலா வசதிகளை மேம்படுத்தும் வகையில் இந்திய தேசிய கலை மற்றும் பண்பாட்டு அறக்கட்டளை மேற்கொண்ட ஆய்வு குறித்தும் அதிகாரிகள் துணைநிலை ஆளுநரிடம் விளக்கமளித்தனா்.

யமுனா நதிக்கரை ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டத்தை ஆய்வு செய்த துணைநிலை ஆளுநா், ஆன்மிக சுற்றுலா, பாரம்பரிய பாதுகாப்பு, பசுமை வளங்கள் மற்றும் வெள்ளத்தடுப்பு திறன் ஆகியவற்றை இணைத்து, யமுனை நதிக்கரையை தில்லியின் முக்கிய பண்பாட்டு மற்றும் பொது இடமாக மாற்றும் திறன் உள்ளதாக வலியுறுத்தினாா்.

சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஒருங்கிணைந்து அடுத்த 6 மாதங்களுக்குள் இந்த படித்துறைகளை புதுப்பிக்கும் பணிகளைத் தொடங்க வேண்டும் என்றும் அவா் உத்தரவிட்டாா்.

‘இந்த முயற்சி மக்களின் வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதோடு, நகர மக்களை மீண்டும் நதியுடன் இணைக்கும் வகையில் அமைய வேண்டும். யமுனை புதுப்பிப்பு திட்டம் நகர மாற்றத்தின் முக்கிய முன்னோடித் திட்டமாக அமைய வேண்டும்’ என தரன்ஜித் சிங் சந்து கேட்டுக்கொண்டாா்.

மேலும், யமுனை நதிக்கரைப் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள அசிதா, பான்சேரா, அம்ருத் உயிரியல் பூங்கா, யமுனை வனஸ்தலி, கலிந்தி அவிரல், யமுனை வாட்டிகா போன்ற முக்கிய சுற்றுச்சூழல் மையங்களின் முன்னேற்றத்தையும் துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து ஆய்வு செய்தாா்.