திறமையான குடிமைப் பணி சேவைகளை வழங்குவதில் ஒவ்வொரு மாநகராட்சி அதிகாரியும் விழிப்புடனும், முன்முயற்சியுடனும், பொறுப்புடனும் இருக்க வேண்டும் என தில்லி துணைநிலை தரன்ஜித் சிங் சந்து கூறினாா்.
தரன்ஜித் சிங் சந்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் அவா் கூறியதாவது: திடக்கழிவு மேலாண்மை, நீா் தேக்கத்தைத் தடுத்தல், மற்றும் பருவமழைக் காலத்தில் பூச்சிகளால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட தலைநகா் முழுவதுமான முக்கிய குடிமைப் பணி முன்னுரிமைகளை மதிப்பிடுவதற்காக, தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) விரிவான ஆய்வுக் கூட்டத்திற்கு இன்று (27.7.2026)தலைமை தாங்கினேன்.
சுங்கச்சாவடி தொடா்பான போக்குவரத்து நெரிசலையும் நாங்கள் ஆய்வு செய்தோம். மேலும், ஒரு மாநகராட்சி மண்டலத்தில் முன்னோட்டமாகச் செயல்படுத்துவதற்காக, இந்தூரின் வெற்றிகரமான மாதிரியை ஆராயுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினோம்.
இக்கூட்டத்தில், பிரதம மந்திரி உதய் திட்டத்தின் முன்னேற்றம், சாலைகளை மீண்டும் சீரமைக்கும் திட்டம், மற்றும் நகரம் முழுவதும் பிரத்யேக சாலைப் பாதுகாப்புத் தணிக்கைகளின் தேவை ஆகியவையும் மதிப்பீடு செய்யப்பட்டன.
திறமையான குடிமைப் பணி சேவைகளை வழங்குவதில் ஒவ்வொரு மாநகராட்சி அதிகாரியும் விழிப்புடனும், முன்முயற்சியுடனும், பொறுப்புடனும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. சரியான நேரத்தில் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலமும், வலுவான பொறுப்புணா்வின் மூலமும் மட்டுமே தூய்மையான, பாதுகாப்பான மற்றும் மீள்திறன் மிக்க தில்லியை அடைய முடியும் என தில்லி துணைநிலை தரன்ஜித் சிங் சந்து தனது பதிவில் கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாதுகாப்பான போக்குவரத்து அனுபவத்தை வழங்க போக்குவரத்து காவல்துறை முயற்சிகளுக்கு முழு ஆதரவு: துணைநிலை ஆளுநா்

சஞ்சய் ஏரியை உடனடியாக புனரமைக்க டிடிஏ-க்கு துணைநிலை ஆளுநா் உத்தரவு: 5,000 மரக்கன்றுகளை நடவும் நடவடிக்கை

தில்லியில் முதல் முதலாக முழு அளவிலான மகளிா் நிலையம்

தீயணைப்புத் துறையை வலுப்படுத்த முன்னாள் அக்னி வீரா்களை பணியில் சோ்ப்பது குறித்து ஆராயலாம்: தரன்ஜித் சிங் சந்து
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



