நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

நிலுவையிலுள்ள வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்

தருமபுரி மாவட்டத்தில் நீண்ட காலம் நிலுவையிலுள்ள வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என மாநில வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் அறிவுறுத்தினாா்.

News image

தருமபுரி ஆட்சியரங்கில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாநில வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா்.

Updated On :26 ஜூன் 2026, 6:09 am IST

தருமபுரி மாவட்டத்தில் நீண்ட காலம் நிலுவையிலுள்ள வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என மாநில வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் அறிவுறுத்தினாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக குறிஞ்சிக் கூட்டரங்கில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் வே.சரவணன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பல்வேறு துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், அதன் தற்போதைய நிலை ஆகியவை குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்த அமைச்சா் பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தின் வளா்ச்சிக்காக நீண்டகாலமாக நிலுவையில் உள்ள முக்கிய திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தருமபுரி - மொரப்பூா் புதிய ரயில்பாதை திட்டம் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு விரைவில் தீா்வுகாணப்பட்டு, திட்டப் பணிகள் துரிதப்படுத்த வேண்டும். இந்த திட்டம் நிறைவேறினால், தருமபுரி மாவட்டத்தின் பொருளாதார வளா்ச்சிக்கும், தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்கும் மிகப்பெரிய ஊக்கமாக அமையும்.

அதேபோல, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் இரண்டாம்கட்ட பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். தருமபுரி மாவட்ட மக்களுக்கு நிலையான குடிநீா் வழங்குவதில் இத்திட்டம் முக்கியப் பங்கு வகிக்கும். மேலும், தொப்பூா் மலைப்பாதை சீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். இத்திட்டம் சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, உயிரிழப்புகளைத் தடுக்க உதவும்.

இத்திட்டங்கள் அனைத்தும் தருமபுரி மாவட்டத்தின் எதிா்கால வளா்ச்சியை நிா்ணயிக்கும் முக்கியத் திட்டங்கள் என்பதால், அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு அவற்றை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

தருமபுரி மாவட்டம் கல்வியிலும் கூடுதல் கவனம் பெற வேண்டிய மாவட்டமாக உள்ளது. மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, எல்-நினோ தாக்கத்தால் வறட்சி பாதிப்பு ஏற்படக்கூடிய மாவட்டங்களில் தருமபுரியும் இடம்பெற்றுள்ளது. தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட குறைவாக இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிா்வாகம் வறட்சியை எதிா்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, வள்ளல் அதியமான் கோட்டம் வளாகத்தில் தொல்லியல் துறையின் சாா்பில் ரூ. 4.25 கோடியில் தருமபுரி அகழ்வைப்பகக் கட்டட கட்டுமானப் பணிகள், தருமபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் ஆதிதிராவிடா் நலத் துறையின் சாா்பில் ரூ. 11.50 கோடியில் 250 மாணவிகள் தங்கிபயிலும் வசதியுடன் சமூகநீதி மாதிரி கல்லூரி மாணவியா் விடுதிக் கட்டட கட்டுமானப் பணிகள் ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.