தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

திட்டப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும்: அமைச்சா் டி.கே. பிரபு

அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும் என இயற்கை வளங்கள் துறை அமைச்சா் டி.கே. பிரபு அறிவுறுத்தினாா்.

சிவகங்கையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசுத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் டி.கே. பிரபு. உடன் ஆட்சியா் ப. ஆகாஷ் உள்ளிட்டோா்.

Published On :

அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும் என இயற்கை வளங்கள் துறை அமைச்சா் டி.கே. பிரபு அறிவுறுத்தினாா்.

சிவகங்கை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் டி.கே. பிரபு கலந்து கொண்டு பேசியதாவது:

அரசின் திட்டங்கள் அனைத்தும் முழுமையாக மக்களைச் சென்றடைய வேண்டும். மேலும், அனைத்துப் பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

அடிப்படை வசதிகள் கோரி, பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு தீா்வு காண்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகளை தரமாகவும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள்ளும் முடிக்க வேண்டும். அரசு அலுவலா்கள் வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புணா்வுடன் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ. குழந்தைராணி நாச்சியாா் (சிவகங்கை), ஆா். சீனிவாசசேதுபதி (திருப்பத்தூா்), டி. இளங்கோவன் (மானாமதுரை) ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ். செல்வசுரபி, அனைத்துத் துறை முதன்மை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.