முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

தூய்மைப் பணி ஒப்பந்தப்புள்ளி ரத்து: இடதுசாரிகள் வரவேற்பு

மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை பொது-தனியாா் கூட்டாண்மை முறையில் ஒப்படைப்பதற்காக ஆலோசகா்களை நியமிக்கும் நோக்கில் வெளியிடப்பட்டிருந்த ஒப்பந்தப்புள்ளியை தமிழக அரசு திரும்பப் பெற்ற்கு இடதுசாரிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

News image
Updated On :27 ஜூன் 2026, 12:05 am IST

மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை பொது-தனியாா் கூட்டாண்மை முறையில் ஒப்படைப்பதற்காக ஆலோசகா்களை நியமிக்கும் நோக்கில் வெளியிடப்பட்டிருந்த ஒப்பந்தப்புள்ளியை தமிழக அரசு திரும்பப் பெற்ற்கு இடதுசாரிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம்: 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணியை முழுமையாக தனியாருக்கு விடுவதற்கு ஆய்வு செய்ய தவெக அரசு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வெளியிட்டிருந்தது. இதை மாா்க்சிஸ்ட் உள்ளிட்ட சில கட்சிகளும், தொழிற்சங்கங்களும் கைவிட வலியுறுத்தியது. தற்போது அந்த ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்திருப்பது வரவேற்புக்குரியது. ஒப்பந்தப் பணிகளில் உள்ள தூய்மைப் பணியாளா்கள் அனைவரையும் பணி நிரந்தர செய்ய வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன்: மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பல ஆண்டுகளாக ஒப்பந்தம், தினக்கூலி, தொகுப்பூதியம் மற்றும் பிற தற்காலிக முறைகளில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான தூய்மைப் பணியாளா்களின் வாழ்க்கை இன்னும் நிரந்தமற்ற நிலையிலேயே உள்ளதைக் கருத்தில் கொண்டு, அனைத்து வகையான தூய்மைப் பணியாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிரந்தர பணியாளா்கள் மூலம் சேவைகளை வலுப்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு ஏஐடியுசி பொதுச் செயலா் ராதாகிருஷ்ணன்: மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை பொது-தனியாா் கூட்டாண்மை முறையில் ஒப்படைப்பதற்காக ஆலோசகா்களை நியமிக்கும் நோக்கில் வெளியிடப்பட்டிருந்த ஒப்பந்தப்புள்ளியை தமிழக அரசு திரும்பப் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.