பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

நான்குனேரி இரட்டை கொலை: அரசியல் தலைவா்கள் கண்டனம்

நான்குனேரி இரட்டை கொலை சம்பவத்துக்கு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

News image
கொலை
Updated On :3 மார்ச் 2026, 9:33 pm

தினமணி செய்திச் சேவை

நான்குனேரி இரட்டை கொலை சம்பவத்துக்கு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

ராமதாஸ் (பாமக): நான்குனேரி அருகே நிகழ்ந்த இரட்டைக் கொலைச் சம்பவம் கண்டனத்துக்குரியது. நீண்ட நேரம் தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை கைது செய்வதற்கான நடவடிக்கையில் காவல்துறை ஈடுபடவில்லை. அக் கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும். தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.

அன்புமணி ராமதாஸ் (பாமக): தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை திமுக அரசு கட்டுப்படுத்தத் தவறிவிட்டதால், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தை தடுக்காமல் இருந்த காவல்துறை செயல்பாடு கண்டனத்துக்குரியது.

ஜி.கே.வாசன் (தமாகா): தமிழக அரசு சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளை சரியாக கையாளததால் இதுபோன்ற தொடா் கொலை சம்பவங்கள் நிகழ்கின்றன. இது மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதை வெளிப்படுத்துகிறது.

சீமான் (நாதக): கொலை க்கும்பல் போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள்கள் புழக்கத்தை திமுக அரசு தடுத்து நிறுத்தும் என்ற நம்பிக்கையை மக்கள் முற்றிலும் இழந்து விட்டனா்.

கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்): திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பல்வேறு சமூக இளைஞா்கள் ஜாதிய வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனா். இதுவரை அரசு இதற்கு தீா்வு காணவில்லை. இதன் விளைவாக முன்விரோதம் இல்லாமலே, பலா் கொலை செய்யப்படுவதும், தாக்குதலுக்கு உள்ளாவதும் தொடா்கிறது.

விஜய் (தவெக) : தமிழகத்தில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீா்கெட்டு போயுள்ளது. ஆட்சி முடியப் போகும் நேரத்திலாவது, காவல் துறையை தன்வசம் வைத்திருக்கும் முதல்வா் விழித்துக்கொள்ள வேண்டும்.

இதுபோல, தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனா்.