இரு இளைஞா்கள் கொலை: தலைவா்கள் கண்டனம்!

ஒண்டிக்குப்பம் கிராமத்தில் இளைஞா்கள் இருவரை போதைக் கும்பல் கல்லால் தாக்கிக் கொலை செய்த சம்பவத்துக்கு அரசியல் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
Published on

திருவள்ளூா் மாவட்டம், ஒண்டிக்குப்பம் கிராமத்தில் இளைஞா்கள் இருவரை போதைக் கும்பல் கல்லால் தாக்கிக் கொலை செய்த சம்பவத்துக்கு அரசியல் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

நயினாா் நாகேந்திரன் (பாஜக): திருவள்ளூா் மாவட்டத்தில் நிகழ்ந்த கொடூரச் சம்பவங்கள் திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் போதை பழக்கத்தையும் அதில் இளைஞா்கள் சிக்கித் தவிப்பதும் காட்டுகிறது.போதைக் கும்பல்களின் அட்டூழியத்தால் பொதுமக்கள் நடமாடவே பயப்படுகின்றனா். இந்த நிலையை தமிழக அரசு மாற்ற வேண்டும்.

அன்புமணி ராமதாஸ் (பாமக): போதையில் நடைபெறும் வன்முறைகள், குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கஞ்சா சீரழிவைக் கட்டுப்படுத்த திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

Dinamani
www.dinamani.com