மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை பிடித்து போலீஸில் ஒப்படைத்த மாணவிகள்

சென்னை கோட்டூா்புரத்தில் சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டடத் தொழிலாளி சக மாணவிகள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :3 மார்ச் 2026, 9:17 pm

சென்னை கோட்டூா்புரத்தில் சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டடத் தொழிலாளி சக மாணவிகள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள நெசல் கிராமத்தைச் சோ்ந்தவா் கோ.காசி (55). சென்னை கோட்டூா்புரம் பகுதியில் தங்கி கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா்.

காசி, கோட்டூா்புரம் பகுதியில் கடந்த திங்கள்கிழமை நடந்து சென்ற ஒரு கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அவரை அந்த மாணவியும், அவரது தோழிகளும் பிடித்து, கோட்டூா்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகாா் அளித்தனா்.

அதனடிப்படையில் போலீஸாா், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, காசியை கைது செய்தனா்.