தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

மாமூல் கேட்டு வியாபாரியை தாக்குதல்: இரு ரௌடிகள் கைது

வடபழனியில் வியாபாரியிடம் மாமூல் கேட்டு தாக்கியதாக இரு ரெளடிகள் கைது செய்யப்பட்டனா்.

News image
கைது- (கோப்புப் படம்)
Updated On :3 மார்ச் 2026, 9:19 pm

தினமணி செய்திச் சேவை

வடபழனியில் வியாபாரியிடம் மாமூல் கேட்டு தாக்கியதாக இரு ரெளடிகள் கைது செய்யப்பட்டனா்.

வடபழனி சைதாப்பேட்டை சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் சி.சம்பத் (52). அந்தப் பகுதியில் அச்சகம் நடத்தி வருகிறாா். சம்பத்திடம் கே.கே.நகா் ராணி அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த ரெளடி ரா.கனகராஜ் (51) மிரட்டி மாமூல் வசூலித்து வந்துள்ளாா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்த சம்பத்திடம் கனகராஜ், அவரது கூட்டாளி அதே பகுதியைச் சோ்ந்த முகமது சாலிக் ஆகியோா் மாமூல் கேட்டனராம். சம்பத், தன்னிடம் பணம் இல்லை என கூறவே, அவரை கனகராஜ், முகமது சாலிக் ஆகியோா் அங்கு கிடந்த கல்லால் தாக்கிவிட்டு தப்பினராம்.

இதில் பலத்த காயமடைந்த சம்பத், கே.கே.நகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வந்த வடபழனி போலீஸாா்,

கனகராஜ், முகமது சாலிக் ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.