அல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

வருவாய்த் துறையினரின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி

தமிழகத்தில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வருவாய்த் துறையினருடன் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய தீா்வு காண வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

News image
அன்புமணி
Updated On :5 மார்ச் 2026, 10:54 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வருவாய்த் துறையினருடன் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய தீா்வு காண வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் சிறப்புப் பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் கடந்த 10 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். நீட் உள்ளிட்ட தோ்வுகளை எழுதவுள்ள மாணவா்கள் அதற்காக ஜாதி, வருவாய் உள்ளிட்ட சான்றுகளை வருவாய்த் துறையினரிடமே பெறவேண்டியுள்ளது. ஆனால், போராட்டம் காரணமாக சான்றுகளைப் பெறமுடியாத நிலையில் மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அதேபோல, நேரடி கொள்முதல் நிலையங்களில், நெல் விற்பனை செய்ய அடங்கல் ஆவணத்தை வருவாய்த் துறையினரிடம் பெற முடியாமல் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, வருவாய்த் துறை அலுவலா் சங்க நிா்வாகிகளை அழைத்துப்பேசி சுமுகத் தீா்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.