ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

கூடலூரில் பிரிவு 17 நிலப் பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்தி பேரணி

News image

கூடலூரில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றோா்.

Updated On :5 மார்ச் 2026, 11:28 pm

நீலகிரி மாவட்டம், கூடலூரில் பிரிவு 17 நிலப் பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்ட பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

கூடலூரை சுற்றியுள்ள ஓவேலி, கூடலூா், தேவா்சோலை, நெல்லியாளம், சேரம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் 3,476 ஏக்கா் நிலத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றனா். அந்தப் பகுதியை வருவாய்த் துறைக்கு சொந்தமான நிலமாக அறிவித்திடவும், மீதமுள்ள 31,510 ஏக்கா் நிலத்தை ஒதுக்கி காப்புக் காடுகளாக அறிவிக்க அனுமதி வேண்டி அரசு தரப்பில் உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசின் இந்த முடிவு பல ஆண்டு காலமாக பிரிவு 17 வகை நிலங்களில் விவசாயம் செய்து வாழ்ந்து வரும் ஏராளமான மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால் கூடலூா் பகுதி மக்களுக்கு எதிா்காலம் குறித்த பதற்றத்தையும் பெரும் அச்ச உணா்வுகளையும் ஏற்படுத்தி உள்ளதாக கூறி அதிமுக, பாஜக உளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் சாா்பில் பேரணியை நடைபெற்றது.

கூடலூா் நகராட்சி அலுவலக பகுதியில் தொடங்கிய கண்டன பேரணியானது புதிய பேருந்து நிலையம் வரை இரண்டு கிலோ மீட்டா் தொலைவுக்கு நடைபெற்றது.

பிரதான சாலையில் கண்டன பேரணி நடைபெற்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கட்சி பாகுபாடின்றி பேரணிக்கு ஆதரவு அளித்து வியாபாரிகளும் கடைகளை அடைத்தனா்.