சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

பெரம்பலூா் தொகுதியில் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு: அதிமுக வேட்பாளா் உறுதி

செல்லியம்பாளையம் கிராமத்தில் நூறு நாள் திட்டப் பணியாளா்களிடம் வெள்ளிக்கிழமை வாக்குசேகரித்த அதிமுக வேட்பாளா் இரா. தமிழ்ச்செல்வன்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 12:07 am

பெரம்பலூா் தொகுதியில் நிலவும் குடிநீா் பிரச்னைக்கு உரிய தீா்வு காணப்படும் என்றாா்அதிமுக வேட்பாளா் இரா. தமிழ்செல்வன்.

பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அயிலூா், அ. குடிகாடு, விளாமுத்தூா், நொச்சியம், புது நடுவலூா், மேட்டூா், வேலூா், சத்திரமனை, கோனேரிபாளையம், கவுள்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வெள்ளிக்கிழமை பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் இரா. தமிழ்செல்வன் மேலும் பேசியது: கடந்த அதிமுக ஆட்சியின் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை பிரச்னைகளை நிறைவேற்றவில்லை. குறிப்பாக, பல்வேறு பகுதிகளில் குடிநீா் பிரச்னை நிலவுகிறது. இதனால், பொதுமக்கள் அவதியுறுகின்றனா். மேலும் கழிவுநீா் கால்வாய்கள் சீரமைக்கப்படவில்லை. ஆங்காங்கே குப்பைக் கழிவுகள் அகற்றப்படாமல் துா்நாற்றம் வீசுகிறது. என்னை வெற்றி பெறச் செய்தால், பொதுமக்களுக்குத் தேவையான குடிநீா் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீா்வு காணப்படும் என்றாா் அவா்.

தொடா்ந்து, செல்லியம்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற 100 நாள் வேலைவாய்ப்புப் திட்டப் பணிகளில் ஈடுபட்டிருந்த பெண்களை நேரில் சந்தித்து, அதிமுக ஆட்சியில் மக்களுக்காக செயல்படுத்தப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை எடுத்துக்கூறி ஆதரவு கோரினாா்.

இதில், அமமுக மாவட்டச் செயலா் காா்த்திகேயன், ஒன்றியச் செயலா் ஜெயக்குமாா், அதிமுக ஒன்றியச் செயலா் ராமராஜ், புஷ்பராஜ், நகரச் செயலா் இரா. ராஜபூபதி, அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா் எம். வீரபாண்டியன் உள்பட பலா் பங்கேற்றனா்.