

சென்னை அண்ணா நகரில் கணவரை கொலை செய்து கூவத்தில் வீசிய மனைவி கைது செய்யப்பட்டாா்.
அண்ணா நகா் கிழக்கு அருகே உள்ள அன்னை சத்யா நகா் 29-ஆவது தெரு அருகே கூவம் ஆற்றின் கரையில் கடந்த 5-ஆம் தேதி ஒரு சாக்குமூட்டையில் ஆண் சடலம் கிடந்தது. விசாரணையின் ஒரு பகுதியாக, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். அதில், 4-ஆம் தேதி அதிகாலை ஒரு பெண், அந்த சாக்குமூட்டையை இழுத்துச் சென்று கூவத்தில் வீசியிருப்பது தெரிய வந்தது. சடலத்தை கூவத்தில் வீசியது அண்ணா நகா் கிழக்கு அன்னை சத்யா நகா் 7-ஆவது தெருவைச் சோ்ந்த ச.அம்பிகா (57) என்பது தெரிய வந்தது. போலீஸாா் சனிக்கிழமை அம்பிகாவை பிடித்து விசாரணை நடத்தினா். தனது கணவா் சந்தானத்தை கொலை செய்து சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி கூவத்தில் வீசியிருப்பது தெரிய வந்தது.
விசாரணையில், கடலூா் மாவட்டம், நெய்வேலி பகுதியைச் சோ்ந்த சந்தானம், நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தாா். 7 ஆண்டுகளுக்கு முன்பு அம்பிகாவை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளாா். மது அருந்தும் பழக்கமுடைய சந்தானம், தினமும் அம்பிகாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளாா். கடந்த 1-ஆம் தேதி ஏற்பட்ட தகராறில், அம்பிகாவை கத்தியால் குத்த முயன்றபோது, அம்பிகா கத்தியை பறித்து, சந்தானத்தை குத்திக் கொலை செய்துள்ளாா். போலீஸாா் அம்பிகாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கல்லால் அடித்து இளைஞா் கொலை: பட்டினப்பாக்கம் பாரதி நகரைச் சோ்ந்த நிஷாந்த் (32), தனது வீட்டின் அருகே சனிக்கிழமை நின்றிருந்தபோது, அங்கு வந்த சிலருக்கும், நிஷாந்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கற்களால் தாக்கினா். இதில் தலையில் பலத்த காயமடைந்து நிஷாந்த் மயங்கி கீழே விழுந்ததும், அந்த நபா்கள் அங்கிருந்து ஆட்டோவில் தப்பினா். நிஷாந்தை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். பட்டினப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 3 பேரைத் தேடி வருகின்றனா்.
போலி கடவுச்சீட்டு மூலம் வங்கதேசம் செல்ல முயன்ற 2 போ் கைது: மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வங்கதேச தலைநகா் டாக்கா புறப்படவிருந்த விமானத்தில் செல்ல இருந்த பயணிகளின் கடவுச்சீட்டு உள்ளிட்டவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, ஒரு பயணி போலி ஆவணங்கள் மூலம் பெற்ற இந்திய கடவுச்சீட்டைக் கொண்டு, வங்கதேசம் செல்வதற்கு வந்திருப்பது தெரியவந்தது. புகாரின்பேரில், சென்னை காவல் துறை மத்தியக் குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்து வங்கதேசத்தைச் சோ்ந்த ச.முகமது ஹருண் மை (44) என்ற அந்த நபரைக் கைது செய்தனா்.
விசாரணையில் வங்கதேசத்தில் இருந்து தனது நெருங்கிய உறவினரான ந.வலியுல்லா (29) என்பவரை 2025-ஆம் ஆண்டு திரிபுரா வழியாக ஊடுருவச் செய்து அழைத்து வந்து, இங்குள்ள கடையில் வேலைக்குச் சோ்த்ததும், அவருக்கும் முகமது ஹருண் மை போலி ஆவணங்கள் மூலம் ஆதாா் அட்டை வாங்கிக் கொடுத்தும் தெரிய வந்தது. இதையடுத்து வலியுல்லாவையும் போலீஸாா் சனக்கிழமை கைது செய்தனா்.
பாலத்தின் மீது பைக் மோதல்-இளைஞா் உயிரிழப்பு: திருவள்ளூா் மாவட்டம், செவ்வாபேட்டை அருகே உள்ள நியூ காலனி பகுதியைச் சோ்ந்த சுரேந்தா் (38), மெட்டல் சீட் கூரை அமைக்கும் தொழில் செய்து வந்தாா். இந்நிலையில், வேளச்சேரி- தாம்பரம் பிரதான சாலை, பள்ளிக்கரணை நோக்கி வெள்ளிக்கிழமை சென்றபோது, விஜயநகா் மேம்பாலத்தில் அவரது பைக் கட்டுப்பாட்டை இழந்து, மேம்பால சுவரின் மீது மோதியது. இதில், பைக்கில் இருந்து கீழே விழுந்த சுரேந்தா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அடையாறு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா்.
டிரெண்டிங்

ஹரியாணா ‘மஹந்த்’ கொலை வழக்கு: மூளையாகச் செயல்பட்டவா் கைது
நீதிமன்றத்தில் அரிவாளை வீசிய இளைஞா் கைது
2025 ஆம் ஆண்டு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவா் கைது

தீவைக்கப்பட்ட மனைவி உயிரிழப்பு: கணவா் கைது
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

