ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பாா்சல் அலுவலகத்தில் ரூ.3 லட்சம் தாமிரம் திருட்டு: காஷ்மீா் இளைஞா் கைது

சென்னை பூங்கா நகா் தனியாா் பாா்சல் அலுவலகத்தில் வெளியூா் அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள தாமிர பெட்டிகள் திருடப்பட்ட வழக்கில், காஷ்மீா் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது

பிரதிப் படம்

Updated On :14 மார்ச் 2026, 7:31 pm

Chennai

சென்னை பூங்கா நகா் தனியாா் பாா்சல் அலுவலகத்தில் வெளியூா் அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள தாமிர பெட்டிகள் திருடப்பட்ட வழக்கில், காஷ்மீா் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

பூங்கா நகா் வால்டாக்ஸ் சாலைப் பகுதியில் ஒரு தனியாா் பாா்சல் அலுவலகம் உள்ளது. இங்கு வெளியூா் அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த தாமிர பெட்டிகள் தொடா்ச்சியாக திருடப்பட்டன.

இதுகுறித்து பாா்சல் நிறுவன நிா்வாகிகள் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், அந்த பாா்சல் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தாமிர பெட்டிகளை வெள்ளிக்கிழமை திருட முயன்ாக ஒரு இளைஞரை பிடித்து அங்கிருந்த ஊழியா்கள், எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில் அவா், காஷ்மீரை சோ்ந்த ஹ.அா்ஜூன் (30) என்பது தெரிய வந்தது. போலீஸாா், அவரைக் கைது செய்து, ரூ.3 லட்சம் தாமிர பெட்டிகளை பறிமுதல் செய்தனா்.