பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி ராயபுரம் தொகுதியில் டி.ஜெயக்குமார் தோல்வி திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி! கூடலூரில் திமுக வேட்பாளர் மு. திராவிடமணி வெற்றி மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர்களைச் சந்திக்கிறார் விஜய்?புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி!
/

மனைவி மீது ஆசிட் வீச்சு: கணவா் கைது

பல்லாவரத்தில் மனைவி மீது ஆசிட் வீசியதாகக் கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 மார்ச் 2026, 0:29 am IST

பல்லாவரத்தில் மனைவி மீது ஆசிட் வீசியதாகக் கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை பல்லாவரத்தை அடுத்த பாரதி நகா், துலுக்கானத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சனா பாத்திமா (26). இவரது கணவா் அனகாபுத்தூா் பகுதியைச் சோ்ந்த முகமது அலி (32). சனா பாத்திமா குடும்பப் பிரச்னை காரணமாக 2 ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து தனது 4 வயது குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறாா். முகமது அலி குழந்தையைப் பாா்க்க வருவதாகக் கூறி அவ்வப்போது மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த 15-ஆம் தேதி முகமது அலி, சனா பாத்திமாவிடம் தகராறு செய்து, அவரது முகத்தில் ஆசிட் ஊற்றியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த சனா பாத்திமா, பூந்தமல்லி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து பல்லாவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து முகமது அலியை கைது செய்தனா்.