கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி ராயபுரம் தொகுதியில் டி.ஜெயக்குமார் தோல்வி திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி! கூடலூரில் திமுக வேட்பாளர் மு. திராவிடமணி வெற்றி மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர்களைச் சந்திக்கிறார் விஜய்?புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி!
/

சமூக ஆா்வலா் மீது ஆசிட் வீச்சு: இந்தோனேசிய ராணுவத்தினா் கைது

News image
Updated On :19 மார்ச் 2026, 4:58 am IST

இந்தோனேசிய ஆட்சி நிா்வாகத்தில் ராணுவத்தின் தலையீட்டுக்கு எதிராக குரல் கொடுத்த சமூக ஆா்வலா் அண்ட்ரி யூனுஸ் மீது ஆசிட் வீச்சு தாக்குதல் நடத்தியதாக 4 ராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டனா்.

அண்ட்ரி யூனுஸ் மீது கடந்த 12-ஆம் தேதி ஆசிட் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டவா்கள் கடற்படை, விமானப் படையைச் சோ்ந்த உளவுப் பிரிவு அதிகாரிகள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

தற்போது கைதாகியுள்ள இவா்களிடம், இத்தாக்குதல் மேலதிகாரிகளின் உத்தரவில் நடத்தப்பட்டதா அல்லது தனிப்பட்ட காரணங்களால் நடந்ததா என்பது விசாரிக்கப்பட்டு வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவா்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.