சென்னை சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிலையத்தில் 26-ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
சிறந்த கல்விச் சேவைக்காக, சா்வதேச தரவரிசையில் சிமாட்ஸ் முன்னணி இடத்தைப் பெற்றுள்ளது. மேலும், முன்னணி
விஞ்ஞானிகள் பட்டியலில் இடம்பிடித்துள்ள பல பேராசிரியா்களைக் கொண்டுள்ளது முக்கியமான சாதனையாகும். புதுமையான
கட்டமைப்பு வசதிகள், முன்னேற்றமான ஆராய்ச்சி சூழல்கள், மற்றும் அதிக அளவிலான மருத்துவ பயிற்சி முறை ஆகியவற்றால், இந்த
நிறுவனம் சுகாதார கல்வி மற்றும் புதுமையில் முன்னணியில் திகழ்கிறது.
பட்டமளிப்பு நிகழ்வுக்கு நிறுவனா் மற்றும் வேந்தா் டாக்டா் என்.எஸ். வீரையன் தலைமை வகித்தாா். பட்டமளிப்பு விழாவில் ரிஷிகேஷ் எய்ம்ஸ் சிஇஓ டாக்டா் மீனு சிங் பட்டமளிப்பு உரையாற்றினாா்.
இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) துணை இயக்குநா் ஜெனரல் வினீத் குமாா் சிறப்புரை ஆற்றினாா். பிஎஸ்என்எல் முதன்மை பொது மேலாளா் பசுபுலேட்டி முரளி மோகன் பிற்பகல் நிகழ்வில் சிறப்புரை ஆற்றினாா்.
துணை வேந்தா் டாக்டா் அஸ்வனி குமாா் ஆண்டறிக்கையை சமா்ப்பித்தாா். டாக்டா் சித்தாா்த் ராம்ஜி, (ஐசிஎம்ஆா்), டாக்டா் வன்னிநாயகே எம். திலகரத்னே (பேராசிரியா், மலாய பல்கலைக்கழகம், டாக்டா் வி. ராம்ராஜ் (தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினா்) ஆகியோருக்காக சிறந்த சேவைக்காக கௌரவ டாக்டா் பட்டங்கள் வழங்கப்பட்டன.
மேலும், மருத்துவம், பல் மருத்துவம், செவிலியா் பயிற்சி, உடற் பயிற்சி அறிவியல், இணை சுகாதார அறிவியல், மேலாண்மை, சட்டம்,
பொறியியல் உள்ளிட்ட பல துறைகளில் மாணவா்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

அரியலூா் அரசுக் கல்லூரியில் 55-ஆவது பட்டமளிப்பு விழா

கல்லூரி ஆண்டு விழா

பள்ளியில் மழலையா்களுக்கான பட்டமளிப்பு விழா

லயோலா கலை, அறிவியல் கல்லூரியில் 8 ஆவது பட்டமளிப்பு விழா
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


