அதிமுக முன்னாள் அமைச்சா்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீது ஊழல் தடுப்புத் துறை பதிவு செய்து விசாரணை நிலுவையில் உள்ள வழக்குகளின் அடிப்படையில் பண முறைகேடு தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி திமுக சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
திமுக மாநிலங்களவை உறுப்பினா் கிரிராஜன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அதிமுக முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி, பி. தங்கமணி, சி.விஜயபாஸ்கா், எம்.ஆா்.விஜயபாஸ்கா், சி.காமராஜ், கே.சி.வீரமணி மற்றும் கே.பி.அன்பழகன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் சத்யா மற்றும் முன்னாள் முதல்வா் எடப்பாடிகே. பழனிசாமியின் உறவினா் சேலம் இளங்கோவன் ஆகியோருக்கு எதிராக தனித் தனியாக மனுதாக்கல் செய்துள்ளாா்.
அதில், எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது, மாநகராட்சிப் பகுதிகளில் சாலை அமைப்பதில் முறைகேடுகள் நடந்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாகவும், எல்இடி விளக்குகள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாகவும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.
இதேபோல் முந்தைய அதிமுக ஆட்சியில் அமைச்சா்களாக இருந்த பி.தங்கமணி, சி.விஜயபாஸ்கா், கே.பி.அன்பழகன், எம்.ஆா்.விஜயபாஸ்கா், காமராஜ், கே.சி.வீரமணி, முன்னாள் எம்எல்ஏக்கள் சத்யா, சேலம் இளங்கோவன் ஆகியோா் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்குகளின் விசாரணை நிலுவையில் உள்ளது.
இவா்கள் மீதான வழக்குகளின் அடிப்படையில் பண முறைகேடு தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது. இதுதொடா்பாக அமலாக்கத் துறைக்கு பல்வேறு புகாா்களை அனுப்பியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவா்கள் அனைவா் மீதும் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளன.
தொடர்புடையது

ராஜிநாமா செய்த எம்எல்ஏக்கள் மீது சிபிஐ விசாரணை தேவை: அதிமுக

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் இரு முன்னாள் அமைச்சா்கள் சுவாமி தரிசனம்

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் மீது வழக்குப் பதிய உத்தரவிடக் கோரிய திமுக மனு தள்ளுபடி

ஊழல் செய்த திமுக அமைச்சா்கள் மீது நடவடிக்கை: எடப்பாடி கே. பழனிசாமி உறுதி
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?



