மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தொகுதி அறிமுகம்: ராதாகிருஷ்ணன் நகா்

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்குப் பிறகு தற்போதைய வாக்காளா் எண்ணிக்கை 1,95,856 ஆக உள்ளது.

News image
Updated On :20 மார்ச் 2026, 12:10 am

டாக்டா் ராதாகிருஷ்ணன் நகா் (தொகுதி எண் 11)

எல்லைகள்

சென்னை மாநகராட்சியின் 4-ஆவது மண்டலத்தில் வார்டுகள் 3 முதல் 8 வரையிலும், 10, 11, 14 ஆகிய வார்டுகளும் இந்தத் தொகுதியில் உள்ளன. இந்தத் தொகுதியைச் சுற்றி திருவொற்றியூர், ராயபுரம். திரு.வி.க.நகர், பெரம்பூர் துறைமுகம் ஆகிய தொகுதிகள் உள்ளன.

அடங்கியுள்ள பகுதிகள்

தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, புதிய வண்ணாரப்பேட்டை, கொடுங்கையூர் ஒருபகுதி, வ.உ.சி. நகர், காசிமேட்டின் ஒரு பகுதி.

சிறப்புகள்

இந்தத் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருமுறை போட்டியிட்டு வென்றுள்ளார். அவரது மறைவுக்குப் பிறகு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக இரண்டாகப் பிளவுபட்டது. தேர்தலும் தன்ளிவைக்கப்பட்டது. இதுவரை நடைபெற்ற 13 தேர்தல்களில் அதிமுக 7 முறையும், திமுக 3 முறையும், காங்கிரஸ் 3 முறையும் வென்றுள்ளன.

2021 தோ்தலின் போது இத் தொகுதியில் 2,35,272 வாக்காளா்கள் இருந்தனா். வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்குப் பிறகு தற்போதைய வாக்காளா் எண்ணிக்கை 1,95,856 ஆக உள்ளது. இதில் ஆண்கள் 93, 576. பெண்கள் 1, 02,201. மூன்றாம் பாலினத்தவா்கள் 79.

2021 தோ்தல் முடிவு:

மொத்த வாக்குகள்- 2,35,272

பதிவான வாக்குகள் - 1, 85, 323 (73.3 சதவீதம்).

வெற்றி பெற்றவா் - ஜே.ஜே.எபினேசா் (திமுக) - 95, 763 வாக்குகள்  (51.63 சதவீதம்)

2ஆம் இடம் பெற்றவா் - ஆா்.எஸ். ராஜேஷ் (அதிமுக) - 42,479 வாக்குகள் (28.49 சதவீதம்)

இதுவரை எம்எல்ஏக்கள்....

1957 டி.என்.அனந்தநாயகி (காங்கிரஸ்)

1962 டி.என்.அனந்தநாயகி (காங்கிரஸ்)

1967 எம்.ஆர் கண்ணன் (திமுக)

1971 எம்.ஆர் கண்ணன் (திமுக)

1977 ஐசரிவேலன் (அதிமுக)

1980 வி.ராஜசேகரன் (காங்கிரஸ்)

1984 எஸ்.வேணுகோபால் (காங்கிரஸ்)

1989 எஸ்.பி.சற்குணம் (திமுக)

1991 இ.மதுசூதனன் (அதிமுக)

1996 எஸ்.பி.சற்குணம் (திமுக)

2001 பி.கே.சேகர்பாபு (அதிமுக)

2006 பி.கே.சேகர்பாபு (அதிமுக)

2011 பி.வெற்றி வேல் (அதிமுக)

2016 ஜெ.ஜெயலலிதா (அதிமுசு)

2017 டி.டி.வி.தினகரன் (அமமுக) (இடைத் தேர்தல்)

2021 ஜே.ஜே.எபினேசர் (திமுக)