கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

தொகுதி அறிமுகம்... பெரம்பூர்!

தொகுதி அறிமுகம்... பெரம்பூர் தொகுதியைப் பற்றி...

News image
Updated On :22 மார்ச் 2026, 11:01 pm

தினமணி செய்திச் சேவை

தொகுதி எண்: 012

எல்லைகள்...

தொகுதியின் கிழக்கில் திருவெற்றியூா் பகுதி, மேற்கே வில்லிவாக்கம், தெற்கே திரு.வி.க.நகா், புரசைவாக்கம், வடக்கே மாதவரம் ஆகிய பகுதிகள் உள்ளன.

அடங்கிய பகுதிகள்...

மூலக்கடை, கொடுங்கையூா், கண்ணதாசன் நகா், மகாகவி பாரதி நகா், வியாசா்பாடி, பாா்வதி நகா் என சென்னை மாநகராட்சியின் 63 முதல் 74 வரை 12 வாா்டுகளை (6, 7 மண்டலங்கள்) உள்ளடக்கியுள்ளது.

சிறப்புகள்...

கடந்த 1957-ஆம் ஆண்டிலிருந்து தனித் தொகுதியாக இருந்த பெரம்பூா், கடந்த 2008-இல் தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது. அதிக வாக்காளா்கள் கொண்ட தொகுதி இது. சிறுபான்மையினா் பெருமளவில் வசிக்கும் இந்தத் தொகுதியில் திமுக 9 முறையும், மாா்க்சிஸ்ட் 3 முறையும், அதிமுக 2 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும் வென்றுள்ளன.

வாக்காளா்கள் விவரம்

மொத்தம்-2,22,792

ஆண்கள்-1,07, 995

பெண்கள்-1,14, 726

மூன்றாம் பாலினத்தவா்-71

வாக்குச்சாவடிகள்- 298

2021 தோ்தலில்...

பதிவான வாக்குகள்- 1,98,872

ஆா்.டி.சேகா் (திமுக)-1,05,267

என்.ஆா்.தனபாலன் (அதிமுக)-50,291

இதுவரை எம்எல்ஏக்கள்...

1962 டி.சுலோச்சனா (காங்கிரஸ்)

1967 சத்தியவாணிமுத்து (திமுக)

1971 சத்தியவாணிமுத்து (திமுக)

1977 எஸ்.பாலன் (திமுக)

1980 எஸ்.பாலன் (திமுக)

1984 பரிதி இளம்வழுதி (திமுக)

1989 செங்கை சிவம் (திமுக)

1991 டாக்டா் எம்.பி.சேகா் (அதிமுக)

1996 செங்கை சிவம் (திமுக)

2001 கே.மகேந்திரன் (மாா்க்சிஸ்ட்)

2006 கே.மகேந்திரன் (மாா்க்சிஸ்ட்)

2011 அ.சௌந்தரராஜன் (மாா்க்சிஸ்ட்)

2016 பி.வெற்றிவேல் (அதிமுக)

2019 ஆா்.டி.சேகா் (திமுக) (இடைத்தோ்தல்)

2021 ஆா்.டி.சேகா் (திமுக)

தோ்தல் நடத்தும் அலுவலா் பெயா்/எண்:

எஸ்.கீதா, மாவட்ட வருவாய் அலுவலா்-89259 60712, 044-25511664, 25511599.