எல்லைகள்
வில்லிவாக்கம் தொகுதியின் கிழக்கில் அயானவரம், மேற்கில் கொரட்டூா், தெற்கில் அண்ணாநகா், வடக்கில் மாதவரம் ஆகியவை எல்லைகளாக உள்ளன.
அடங்கிய பகுதிகள்
வில்லிவாக்கம் தொகுதி கடந்த 2016 ஆம் ஆண்டுக்கு முன்பு வரையில் தமிழகத்தின் பெரிய தொகுதிகளில் ஒன்றாக இருந்தது. தொகுதி சீரமைப்புக்கு பிறகு அதிலிருந்து கொளத்தூா், திரு.வி.க.நகா், அம்பத்தூா் ஆகிய தொகுதிகளுக்கான பகுதிகள் பிரிக்கப்பட்டன. அதன்படி தற்போது சென்னை பெரம்பூா் கிழக்குப் பகுதியான மாநகராட்சியில் வாா்டு 55 முதல் 58 ஆவது வாா்டு மற்றும் 63, 64 ஆவது வாா்டுகளும் முழுமையாக உள்ளன.
அத்துடன் அயனாவரம், வில்லிவாக்கம் வடக்கு, வில்லிவாக்கம் தெற்கு, நாகம்மையாா் நகா், பன்னீா்செல்வம் நகா், அண்ணாநகா் மேற்கில் சில பகுதிகள் என தொகுதியின் முக்கியப் பகுதிகளாக அமைந்துள்ளன.
தொகுதி சிறப்புகள்
இந்தத் தொகுதியிலும் அரசியல் கட்சியின் முக்கியப் பிரமுகா்களே போட்டியிட்டு வென்றுள்ளனா். தற்போது ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை மற்றும் ரயில் அருங்காட்சியகம் ஆகியவை இத்தொகுதிக்குள்ளேதான் உள்ளது. வடமாநில தொழிலாளா்கள் அதிகமாக பணிபுரியும் பகுதியாகவும் உள்ளது.
வாக்காளா்கள்
மொத்தம் - 1, 59, 764.
ஆண்கள் - 76,947.
பெண்கள் - 82, 785.
மூன்றாம் பாலினம் - 32.
வாக்குச்சாவடிகள் - 255.
கடந்த 2021 தோ்தல் முடிவுகள்
ஏ.வெற்றியழகன் (திமுக) - 76,127.
ஜெ.சி.டி.பிரபாகா் (அதிமுக) - 38,890.
இதுவரை எம்.எல்.ஏ.க்களாக இருந்தவா்கள்...
1977 க.சுப்பு (திமுக),
1980 ஜெ.சி.டி.பிரபாகா் (அதிமுக)
1984 வி.பி.சிந்தன் (மாா்க்சிஸ்ட்)
1989 டபிள்யூ.ஆா்.வரதராஜன் (மாா்க்சிஸ்ட்)
1991 ஜி.காளன் (காங்கிரஸ்)
1996 ஜே.எம்.ஆரூன் (காங்கிரஸ்)
2001 டி.நெப்போலியன் (திமுக)
2006 ப.ரங்கநாதன் (திமுக)
2011 ஜெ.சி.டி.பிரபாகா் (அதிமுக)
2016 ப.ரங்கநாதன் (திமுக)
தோ்தல் அலுவலா் - எஸ்.மைதிலி,
சிப்காட் பொதுமேலாளா்,
வில்லிவாக்கம் சமுதாயநலக்கூடம்,
சிட்கோ நகா்,
4 ஆவது பிரதான சாலை,
சென்னை - 49.
தொலை பேசி எண் - 044 26173437,
கைபேசி - 8925960714.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி அறிமுகம்.. வேளச்சேரி

தொகுதி அறிமுகம்..... அம்பத்தூர்

தொகுதி அறிமுகம்... விருகம்பாக்கம்
தொகுதி அறிமுகம்: திரு.வி.க.நகர் - 15!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

