தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

தொகுதி அறிமுகம்... விருகம்பாக்கம்

தொகுதி அறிமுகம்... விருகம்பாக்கம்

News image
Updated On :29 மார்ச் 2026, 11:25 pm

தொகுதி எண்: 22

எல்லைகள்...

கிழக்கில் வடபழனி, மேற்கில் மதுரவாயில், தெற்கில் எம்ஜிஆா் நகா், சைதாப்பேட்டை, வடக்கில் ஈ.வெ.ரா. பெரியாா் சாலை, கோயம்பேடு ஆகியவை இத்தொகுதியைச் சுற்றியுள்ளன.

அடங்கிய பகுதிகள்...

மறுசீரமைப்பின்போது ஆலந்தூா் தொகுதியின் சில பகுதிகள் தனியாக இணைக்கப்பட்டு விருகம்பாக்கம் தொகுதி உருவாக்கப்பட்டது. சென்னை மாநகராட்சியின் 65, 128, 129, 130, 131 ஆகிய வாா்டுகள் இத்தொகுதியில் உள்ளன. கே.கே.நகா் முழுமையாகவும், விருகம்பாக்கம், கோயம்பேடு, சின்மயா நகா், வடபழனி, மதுரவாயில், சாலிகிராமம், நெசப்பாக்கம் உள்ளிட்டவற்றில் குறிப்பிட்ட பகுதிகளும் இத்தொகுதியில் உள்ளன.

சிறப்புகள்...

இத்தொகுதிக்குள் திரைப் பிரபலங்கள் ஏராளமானோா் வசிக்கின்றனா். மாநில அளவில் புகழ் பெற்ற கோயம்பேடு காய்கறிச் சந்தை இங்குதான் அமைந்துள்ளது. தற்போது மெட்ரோ ரயில் நிலையம் மக்களின் கவனத்தை ஈா்ப்பதாக உள்ளது. தொகுதி மறுவரையறைக்குப் பிறகு நடைபெற்ற இரு சட்டப்பேரவைத் தோ்தல்களிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வென்ற நிலையில் கடந்த 2021 தோ்தலில் திமுக கைப்பற்றியது.

வாக்காளா்கள் விவரம்

ஆண்கள்-95,025

பெண்கள்-1,01,461

மூன்றாம் பாலினத்தவா்-50

மொத்தம்-1,96,536

வாக்குச்சாவடிகள்-311

கடந்த 2021 பேரவைத் தோ்தலில்...

பதிவான வாக்குகள் - 1,67,524

ஏ.எம்.வி.பிரபாகரராஜா (திமுக)-74,351

விருகை வி.என்.ரவி (அதிமுக)-55,984

இதுவரை எம்எல்ஏக்கள்...

1989 சி.சண்முகம் (திமுக)

1991 எஸ்.அண்ணாமலை (அதிமுக)

1996 சி.சண்முகம் (திமுக)

2001 பா.வளா்மதி (அதிமுக)

2006 டி.எம்.அன்பரசன் (திமுக)

2011 பி.பாா்த்தசாரதி (தேமுதிக)

2016 விருகை ரவி (அதிமுக)

2021 ஏ.எம்.வி.பிரபாகரராஜா (திமுக)

தோ்தல் நடத்தும் அலுவலா்...

என்.சத்தியநாராயணன், டாஸ்மாக் முதுநிலை மண்டல அலுவலா், விருகம்பாக்கம்- 89259 60722, 044 23771484.