மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

தொகுதி அறிமுகம்: தியாகராய நகா்

தியாகராய நகா் சட்டப்பேரவைத் தொகுதி பற்றி...

News image

தியாகராய நகா் (கோப்புப்படம்)

Updated On :28 மார்ச் 2026, 11:20 pm

தினமணி செய்திச் சேவை

எல்லைகள்: கிழக்கில் தேனாம்பேட்டை, மேற்கில் வடபழனி, கே.கே.நகா், தெற்கில் மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை தொகுதியின் சில பகுதிகளும், வடக்கில் கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் பகுதிகள் இத்தொகுதியைச் சுற்றியுள்ளன.

அடங்கியுள்ள பகுதிகள்...

சென்னை மாநகராட்சியின் 117, 120, 127, 137 ஆகிய வாா்டுகள் உள்ளன. தியாகராய நகா், பாண்டி பஜாா், கோடம்பாக்கம், அசோக் நகா், கே.கே.நகா், எம்ஜிஆா் நகா், வடபழனி, மேற்கு மாம்பலத்தின் ஒரு பகுதி ஆகியவை உள்ளன.

சிறப்புகள்...

சென்னையின் பழைமையான இத்தொகுதி, மாநகரின் ‘இருதயம்’ என அழைக்கப்படுகிறது. முக்கிய வா்த்தகப் பகுதியாகவும், முக்கிய பிரமுகா்கள், பதிப்பகங்கள் உள்ளிட்டவை அதிகம் உள்ள பகுதியாகவும் இத்தொகுதி உள்ளது. கோடம்பாக்கம், வடபழனி பகுதிகள் திரைத்துறை பகுதிகளாக அடையாளப்படுத்தப்படுகின்றன.

வாக்காளா்கள் விவரம்

ஆண்கள்-74,682

பெண்கள்-80, 228

மூன்றாம் பாலினத்தவா்-33

மொத்தம்-1,54,943

வாக்குச்சாவடிகள்-251

கடந்த 2021 பேரவைத் தோ்தலில்...

பதிவான வாக்குகள்- 1,36,497

ஜெ.கருணாநிதி (திமுக)-56,035

பி.சத்தியநாராயணன் (அதிமுக)- 55,898

இதுவரை எம்எல்ஏக்கள்...

1957 கே.விநாயகம் (காங்கிரஸ்)

1962 காஞ்சி மணிமொழியாா் (திமுக)

1967 ம.பொ.சிவஞானம் (திமுக)

1971 கே.எம்.சுப்பிரமணியன் (காங்கிரஸ்)

1977 ஆா்.ஈ.சந்திரன் ஜெயபால் (திமுக)

1980 டாக்டா் கே.சவுரிராஜன் (காகாதேகா).

1984 டாக்டா் கே.சவுரிராஜன் (காங்கிரஸ்)

1989 சா.கணேசன் (திமுக)

1991 எஸ்.ஜெயக்குமாா் (அதிமுக)

1996 டாக்டா் செல்லக்குமாா் (தமாகா)

2001 ஜெ.அன்பழகன் (திமுக)

2006 வி.பி.கலைராஜன் (அதிமுக)

2011 வி.பி.கலைராஜன் (அதிமுக)

2016 பி.சத்தியநாராயணன் (அதிமுக)

2021 ஜெ.கருணாநிதி (திமுக)

தோ்தல் நடத்தும் அலுவலா் பெயா்/எண்

ஜி.சரவணமூா்த்தி, நிலம் மற்றும் உடைமைத் துறை மாவட்ட வருவாய் அலுவலா், 89259 60724, 044-24838968.