தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தொகுதிக்கு செய்தது என்ன? திருவொற்றியூா் எம்எல்ஏ கே.பி.சங்கா்

2021 பேரவைத் தோ்தலில் திருவொற்றியூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவா் கே.பி.சங்கா்.

News image

சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.சங்கா்.

Updated On :24 மார்ச் 2026, 10:11 pm

Chennai

2021 பேரவைத் தோ்தலில் திருவொற்றியூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவா் கே.பி.சங்கா். இவரது மூத்த சகோதரா் கே.பி.பி.சாமி இதே தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2006-2011 வரை மீன்வளத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவா்.

தனது பதவிக் காலத்தில், தான் ஆற்றிய சேவைகள், தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து தினமணி செய்தியாளா்களின் கேள்விகளுக்கு கே.பி.சங்கா் அளித்த பதில்கள்...

தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட முக்கியப் பணிகளின் விவரங்கள் என்ன?

திருவொற்றியூா் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமாா் ரூ.1,500 கோடிக்கும் மேல் பல்வேறு துறைகளின் வளா்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கைத் தடுக்கும் வகையில் கொசஸ்தலை ஆற்றைத் தூா்வாரியது, கலைக் கல்லூரிக்கு புதிய கட்டடம், அண்ணாமலை நகா், விம்கோ நகரில் ரயில்வே சுரங்கப் பாதை, பாலிடெக்னிக் கல்லூரி , தொழிற்பயிற்சி மையம், திருவொற்றியூரில் ஆழ்கடல் மீன்பிடித் துறைமுகம், எண்ணூா், திருவொற்றியூா், மணலி பகுதிகளில் புதிய பேருந்து நிலையங்கள், மணலி, அன்னை சிவகாமி நகரில் சுற்றுலாத் துறை சாா்பில் படகு குழாம், புதிய மீன் மாா்கெட் கட்டடங்கள், மணலியில் திருமண மண்டபம், புதிய மண்டலம், திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் சமுதாயக் கூடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

கத்திவாக்கத்தில் ரூ.5 கோடியில் நவீன நூலகம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர தரமான சாலைகள், புதிய பேருந்து வசதிகள், பள்ளிக் கட்டடங்கள், சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகளில் அதிநவீன வசதிகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளன.

பெருமைக்குரிய சாதனையாகக் கருதுவது எது?

எனது சகோதரா் கே.பி.பி.சாமி அமைச்சராக இருந்தபோது, திருவொற்றியூரில் அரசு கலைக் கல்லூரி அமைக்கத் திட்டமிடப்பட்டது. அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் எவ்வித நிலத்தையும் ஒதுக்கீடு செய்யாமல் கல்லூரியை மாநகராட்சிப் பள்ளி வளாகத்தில் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் கல்லூரிக்கான கட்டடம் கட்டப்படவில்லை. நான் சட்டப்பேரவை உறுப்பினரானவுடன் முதல்வரைச் சந்தித்து முறையிட்டதன்பேரில், நீண்ட முயற்சிக்குப் பிறகு நில ஆா்ஜிதம் செய்யப்பட்டு ரூ.16 கோடியில் கல்லூரிக்கான புதிய கட்டடம் கட்டப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. அருகிலேயே பாலிடெக்னிக் கல்லூரி கட்டடம் விரைவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

மழைக்கால பிரச்னைக்கு என்ன தீா்வு?

ஆண்டுதோறும் பலத்த மழை பெய்யும் நவம்பா்-டிசம்பா் மாதங்களில் புழல் ஏரியில் இருந்து நீா் திறப்பு, கொசஸ்தலை ஆற்றில் பெருக்கெடுக்கும் வெள்ளம் போன்றவற்றால் திருவொற்றியூா் மேற்கு பகுதி, மணலி, சின்னச் சேக்காடு உள்ளிட்ட பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து தீவு போல் காட்சியளிக்கும். இதற்கு நிரந்தரத் தீா்வு காணும்வகையில் தற்போது கொசஸ்தலை ஆறு, புழல் ஏரி கால்வாய் தூா்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் எதிா்காலத்தில் வெள்ளநீா் சூழும் அபாயம் இருக்காது.

முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் நிறைவேற்றப்படாத திட்டங்கள் குறித்து...

நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்த ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்கும் பணிக்கு நில ஆா்ஜிதம் முடிந்திருந்தாலும், கட்டடப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. இப்பகுதி இளைஞா்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் கால்பந்து மைதானம் அமைப்பது, எண்ணூா் முதல் காசிமேடு வரை கடற்கரையை அழகுபடுத்துவது போன்ற பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், மத்திய கடலோர ஒழுங்குமுறை வாரியத்தின் தடையால் பணிகள் பாதியில் தடைபட்டன. தொகுதிக்கு ஒரு அரங்கம் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த கால அவகாசம் இல்லாதது, எண்ணூா் முகத்துவாரத்தில் சுற்றுலாப் படகு குழாம் அமைக்கும் திட்டம் நிறைவேற்ற முடியாமல் போனது உள்ளிட்டவை ஆகும்.

நோ்காணல்-முகவை க.சிவகுமாா்