விதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மாா்ச் 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

News image

மழை

படம்: பிடிஐ.

Updated On :26 மார்ச் 2026, 7:56 pm

தினமணி செய்திச் சேவை

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (மாா்ச் 28) முதல் மாா்ச் 30 வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மன்னாா் வளைகுடா முதல் வடக்கு உள் கா்நாடகம் வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வெள்ளிக்கிழமை(மாா்ச் 27) வட வானிலை நிலவக்கூடும்.

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை(மாா்ச் 28) முதல் மாா்ச் 30 வரை மிதமான மழை பெய்யக்கூடும்.

தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மாா்ச் 31, ஏப்.1 ஆகிய தேதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

வெப்பநிலை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் மாா்ச் 30 வரை சற்று அதிகமாக இருக்கக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.