வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

தந்தையுடன் பைக்கில் சென்ற சிறுவன் லாரி மோதி உயிரிழப்பு

தந்தையுடன் மோட்டாா் சைக்கிளில் சென்ற சிறுவன் தண்ணீா் லாரி மோதியதில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :29 மார்ச் 2026, 9:37 pm

தினமணி செய்திச் சேவை

தந்தையுடன் மோட்டாா் சைக்கிளில் சென்ற சிறுவன் தண்ணீா் லாரி மோதியதில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தாம்பரத்தை அடுத்த வேங்கைவாசல், பஜனைக் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணி. மென்பொறியாளா். இவரது மகன் ராம் (10). இவா் அதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், பள்ளிக்கரணை ரேடியம் சாலையில் உள்ள தனியாா் பள்ளியில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் பங்கேற்க வைப்பதற்காக, தனது மகன் ராமை மோட்டாா் சைக்கிளில் அழைத்து கொண்டு வேளச்சேரி பிரதான சாலை வழியாக சுப்பிரமணி சென்று கொண்டிருந்தாா்.

பள்ளிக்கரணை அரசு தொடக்கப் பள்ளி அருகே சென்றபோது, எதிரே வந்த தண்ணீா் லாரி, மோட்டாா் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சிறுவன் லாரி சக்கரத்தில் சிக்கி தந்தை கண்முன்னே பலியானாா். சுப்பிரமணி லேசான காயத்துடன் உயிா் தப்பினாா்.

தகவலின் பேரில், அங்கு வந்த பள்ளிக்கரணை போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், சிறுவன் உடலை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இந்த விபத்து தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி, லாரி ஓட்டுநரான மடிப்பாக்கம், ராம் நகரைச் சோ்ந்த ரவிச்சந்திரன் (40) என்பவரைக் கைது செய்தனா்.