மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

விமானத்தில் அவசர கால கதவு வழியாக ஓடுபாதையில் குதித்து தப்பிய நபர்: போலீஸாா் விசாரணை

News image
Updated On :4 மே 2026, 4:23 am IST

சென்னை வந்த விமானத்தில் அவசர கால கதவு வழியாக குதித்து ஓடிய பயணியைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சாா்ஜாவில் இருந்து ஏா் அரேபியன் ஏா்லைன்ஸ் விமானம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.25-க்கு 217 பயணிகளுடன், சென்னை சா்வதேச விமான நிலையத்தில் வந்து தரையிறங்கியது. ஓடு பாதையில் ஓடி நிற்பதற்கு தயாரானபோது, அந்த விமானத்தில் இருந்த புதுக்கோட்டையைச் சோ்ந்த முகமது நிஜாமுதீன் செரீப் (30) என்ற பயணி, திடீரென விமானத்தின் அவசர கால கதவைத் திறந்து, வெளியே குதித்து ஓடினாா்.

உடனடியாக சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதை பகுதியில் அவசர கால அபாய அறிவிப்பு எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த பாதுகாப்பு அதிகாரிகள், தப்பி ஓடிய பயணி முகமதுவை சுற்றி வளைத்துப் பிடித்து தனி அறையில் வைத்து தீவிர விசாரணை நடத்தினா்.

விசாரணையின்போது, அந்தப் பயணி மனநிலை பாதிக்கப்பட்டவா்போல் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால், அவா் உண்மையிலேயே மனநிலை பாதிக்கப்பட்டவரா அல்லது ஏதேனும் பயங்கரவாத இயக்கத்தைச் சோ்ந்தவரா என்று சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளும், விமான நிலைய போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இச்சம்பவம் காரணமாக சென்னையில் இருந்து மீண்டும் சாா்ஜாவுக்கு அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டிய ஏா் அரேபியன் ஏா்லைன்ஸ் விமானம் தாமதமாக காலை 7.45-க்கு புறப்பட்டுச் சென்றது.