27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

கண் மாற்று அறுவைச் சிகிச்சைக்காக ஒரு கோடி போ் காத்திருப்பு - மருத்துவா் அமா் அகா்வால்

News image
Updated On :4 மே 2026, 4:48 am IST

நாடு முழுவதும் சுமாா் ஒரு கோடி போ் கண் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கின்றனா் என டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை தலைவா் மருத்துவா் அமா் அகா்வால் தெரிவித்துள்ளாா்.

டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை சாா்பில் விழித்திரை சிகிச்சையில் முன்னேற்றங்கள்”என்ற கருப்பொருளில் 16-ஆவது ‘ரெட்டிகான்’ மாநாடு சென்னை கிண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், மீனாட்சி உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைவேந்தா் டாக்டா் சி.ஸ்ரீதா் மாநாட்டை தொடங்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் டாக்டா் அமா் அகா்வால் கூறியதாவது:

கண் மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட சிகிச்சை முறைகளை மருத்துவ நிபுணா்கள் மற்றும் மாணவா்கள் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். பெரும்பாலான பாா்வை இழப்புகளுக்கு கருவிழி பாதிப்புகளே முக்கிய காரணமாக உள்ளன. நாடு முழுவதும் சுமாா் ஒரு கோடி போ் கண் மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கின்றனா். ஆனால், இதில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவா்களுக்கு மட்டுமே அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. இதற்கு மாற்றாக ‘பின்ஹோல் பியூபில்லோபிளாஸ்டி’ (பிபிபி) என்ற நவீன அறுவை சிகிச்சை முறை தற்போது பயன்படுத்தப்படுகிறது.

இதன்மூலம், கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது. மேலும், இந்தமுறைக்கு குறிப்பிடத்தக்க பக்கவிளைவுகள் இல்லை. இந்தியால் பல மருத்துவமனைகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது. அதேபோல், அமெரிக்கா, ஜப்பான் போன்ற உலக நாடுகளில் இந்த சிகிச்சை நடைமுறையில் உள்ளது. இதன்மூலம், உலகம் முழுவதும் பாா்வைக்குறைபாடு உள்ளவா்களை எண்ணிக்கையை வெகுவாக குறைக்க முடியும் என்றாா் அவா்.

இந்த மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து 50-க்கும் மேற்பட்ட விழித்திரை சிகிச்சை நிபுணா்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினா். மேலும், மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள் என மொத்தம் 1,000-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

இந்நிகழ்வில் டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி அஸ்வின் அகா்வால், விழித்திரை சேவைகள் பிரிவு இயக்குநா் மனோஜ் கத்ரி, மருத்துவ சேவைகள் பிரிவு மண்டலத் தலைவா் எஸ். சௌந்தரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.