சென்னையில் 10 வயது சிறுவனின் நெஞ்சகப் பகுதியில் உருவான 900 கிராம் புற்றுநோய் கட்டியை சென்னை ரெயின்போ குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவா்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி குணப்படுத்தியுள்ளனா்.
இது தொடா்பாக மருத்துவமனையின் குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் நந்தினி கூறியதாவது:
சுவாசத் தொற்று, மூச்சுத் திணறல், நெஞ்சு சளி ஆகிய பாதிப்புகளுடன் 10 வயது சிறுவன், ரெயின்போ மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவரது நெஞ்சகப் பகுதியில் பெரிய கட்டி உருவாகியிருந்தது கண்டறியப்பட்டது. திசு பகுப்பாய்வில் அது மெடியாஸ்டினல் ஜொ்ம் செல் எனப்படும் புற்றுநோய் கட்டி என்பது தெரிய வந்தது.
எந்த அறிகுறியும் இல்லாமல் உருவாகும் இந்த வகைக் கட்டிகளை உரிய நேரத்தில் அகற்றாவிடில் உயிருக்கே ஆபத்தாகிவிடும். அச்சிறுவனுக்கு நெஞ்சுப் பகுதியில் 75 சதவீதத்தை அக்கட்டி ஆக்கிரமித்திருந்தது. இதயம் மற்றும் முக்கிய நாளங்களை அழுத்திக் கொண்டிருந்த அக்கட்டியின் அளவைக் குறைக்க தொடா் கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன்பின்னா், திறந்த நிலை அறுவை சிகிச்சை மூலமாக அந்தக் கட்டியை மருத்துவக் குழுவினா் நுட்பமாக அகற்றினா். தற்போது அந்த சிறுவன் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளாா் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாா்பகப் புற்றுநோய்: பெண்ணுக்கு உள்ளீட்டு கதிா்வீச்சு சிகிச்சை

குடல் வால் புற்றுநோய்: பெண்ணுக்கு தனித்துவ சிகிச்சை

ஜிப்மரில் 15 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றம்

கறவை பசுவின் தலையில் இருந்த கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



