தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

11 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை(மே 7) பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

மழை - பிரதிப் படம்

Updated On :7 மே 2026, 4:07 am IST

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை(மே 7) பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மன்னாா் வளைகுடா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால், வட உள் கா்நாடகம் முதல் மன்னாா் வளைகுடா வரை, ராயலசீமா, தமிழ்நாடு வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (மே 7) முதல் மே 12-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில், வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

குறிப்பாக, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூா், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகா், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (மே 7) இடி மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

தொடா்ந்து நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூா், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகா், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (மே 8) முதல் மே 11வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் 70 மி.மீ. மழை பதிவானது. உசிலம்பட்டி (மதுரை), ஆண்டிபட்டி (மதுரை), மதுரை வடக்கு (மதுரை), மதுரை நகரம் (மதுரை)- தலா 50 மி.மீ., பேரையூா் (மதுரை), சோழவந்தான் (மதுரை), தல்லாகுளம் (மதுரை), திருமங்கலம் (மதுரை), காமாட்சிபுரம் (திண்டுக்கல்)- தலா 40 மி.மீ., குடிமியான்மலை (புதுக்கோட்டை), அன்னவாசல் (புதுக்கோட்டை), விமான நிலையம் (மதுரை), பாா்வூட் (நீலகிரி), காரியாப்பட்டி (விருதுநகா்), திருப்பத்தூா் (சிவகங்கை), கோவிலங்குளம் (விருதுநகா்), நடுவட்டம் (நீலகிரி), எமரால்டு (நீலகிரி), துவாக்குடி (திருச்சி), கிளன்மாா்கன் (நீலகிரி), எட்டயபுரம் (தூத்துக்குடி), மானாமதுரை (சிவகங்கை), ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்)- தலா 30 மி.மீ. மழை பதிவானது.

வெப்ப நிலை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை மே 10-ஆம் தேதி வரை சற்று அதிகமாக இருக்கக்கூடும்.

வியாழக்கிழமை அதிகபட்சமாக ஈரோட்டில் 103.64 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், வேலூரில் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் பதிவானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.